சிவதி: # நானே கேள்வி # நானே பதில் # சிவதி # கட்டிட அனுமதி - வினா எண் 24
கேள்வி - புற்றீசல் போல மனைப்பிரிவுகள் பெருகி வருகின்றன? இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)மற்றும்.ம. துவ வ அ கடமை என்ன?
பதில் - மனைப்பிரிவு நகர் ஊரமைப்பு துறையால் அங்கிகரிக்கப் படுமானால் நிச்சயமாக அதில் 10% க்கு குறையாமல் OSR land ஊராட்சிக்கு தானபத்திரமாக வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு layoutக்கும் தானபத்திரமாக வழங்கப்பட்ட இடம் ஊராட்சியால் பராமரிக்கப் படவேண்டும்.
AD (Panchayat) மற்றும் Zonal Dy.Bdo ஊராட்சி ஆய்விற்கு செல்லும் போது ஊராட்சி சொத்துப் பதிவேடு எண். 16ல் ஒப்படைக்கப்பட்ட நிலத்தின் சர்வே எண் மற்றும் விஸ்தீரணம் ஆகியவை குறிப்பிட்டுள்ளதை கண்காணிக்க வேண்டும்.
அந்த நிலத்திற்கான தானபத்திரத்தை ஆய்வுகுட்படுத்தி, அவை ஆக்கிரமிப்பு இன்றி வேலியிட்டு பராமரிக்கப் படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
அந்த நிலத்திற்கான தானபத்திரத்தை ஆய்வுகுட்படுத்தி, அவை ஆக்கிரமிப்பு இன்றி வேலியிட்டு பராமரிக்கப் படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
பல ஊராட்சிகளில் இது சரியாக பராமரிக்கப்படுதில்லை என்ற குறைகள் உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில கணக்காயர் தணிக்கைத்தடையில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஊராட்சிக்கென புதிய கட்டிடங்கள் வரும் போது பொதுவாக நீர்நிலை ஓரமாக கட்டுவதை தவிர்த்து இது போன்று ஊராட்சி ஒப்படைப்பட்ட இடத்தை பயன்படுத்திக்கொள்வது சிறப்பானது.
நாம் நீர்நிலைகளையும் நமக்கு ஒப்படைபடைக்கப்பட்ட / தானமாக அளிக்கப்பட்ட நிலத்தினையும் ஒருங்கே பாதுகாத்த திருப்தி இருக்கும்
அது போல தனபத்திரமாக வழங்கப்பட்ட பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தின் முத்திரைத்தாள் ஆவணத்தை ஒவ்வொருமுறையும் ஊராட்சியில் சரிபாருங்கள் # சிவதி. 7871336611