நானே கேள்வி # நானே பதில் # அடிப்படை விதிகள் - வினா எண் 37
கேள்வி - கருணை அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதார் எவ்வளவு படித்திருந்தாலும் அவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம்தான் வழங்கப்படுமா?
பதில் - அலுவலக உதவியாளரோ, ஊராட்சி செயலரோ அல்லது இரவுக்காவலரோ இறந்தால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு இளநிலை கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடம் வேண்டும் என்று போராடி பெற்ற அரசு ஊழியர் சங்கங்களுக்கும் ஊ. வளர்ச்சித்துறை அ. சங்கத்திற்கும் முதலில் நன்றியை சொல்லிவிட்டு பதிலினை தொடங்குவது முறையாக இருக்கும்.
கருணை அடிப்படையில் விணப்பபிப்பவர் பொறியில், மருத்துவம், வேளாண்மை, தொழில் நுட்பம் என முடித்தவராக இருப்பாராயின் அதாவாது BE, MBBS, B.Sc.( Agri) …என முடித்திருப்பாராயின் அவரது படிப்புக்கு தகுதியான பணியிடத்தை வழங்க வழி வகை உள்ளது.
ஒருவேளை அந்த துறையில் அவ்வாறு பணியிடம் இல்லை எனில் மாற்றுத்துறைக்கும் பரிந்துரைத்து அவரது படிப்புக்கான பணியிடத்தை பெறலாம்.
உண்மையாகவ சொல்றீங்க… இது சாத்தியமா என்றால். ஆம் சாத்தியம்தான். ஏற்கனவே அரசு G.O.(3D) No. 46, PWD Dt. 7.9.2001 ன் படி கருணை அடிப்படையில் விண்ணப்பித்தவருக்கு உதவிப்பொறியாளர் வழங்கி உத்திரவிட்டுள்ளது. இது பொதுப்பணித்துறையில நடந்தது.
பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இப்போது ஒரு புள்ளி வைத்துள்ளது. 16.9.2006ல் கடித எண் 126/Q1M2006 ன் படி இதுபோன்ற நடைமுறைகள் C மற்றும் D க்கு மட்டுமே பொருந்தும் என்று கடிதம் அனுப்பியுள்ளது.
அதிகாரிகளின் ஒற்றுமை உலக முதலாளிகளின் ஒற்றுமையைவிட தலைசிறந்தது என்பதை நாம் உணர முடிகிறது. # சிவதி, 7871336611, TNRDOA