Showing posts with label கட்டிட அனுமதி. Show all posts
Showing posts with label கட்டிட அனுமதி. Show all posts

Monday, November 7, 2016

கட்டிட அனுமதி - வினா எண் 30

நானே கேள்வி # நானே பதில் # சிவதி- கட்டிட அனுமதி - வினா எண் 30

கேள்வி - கட்டிட அனுமதி குறித்து ஏதேனும் சிறப்பு செய்தி உண்டா?

பதில் -  உண்டு, தொழில் முதலீடு மற்றும் கட்டிடவியலார் நூற்றாண்டு விழாக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட நடுவண் அரசின்  நகர்புற வளர்ச்சி  அமைச்சர்  வெங்கய்யா ஒரு செய்தியினை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் பெருநகர திட்டக்குழுமம் மற்றும் நகர் புற ஊரமைப்பு இயக்ககத்திடம் கட்டிட அனுமதி பெறும் பொருட்டு   விண்ணபித்து அனுமதி பெறும் நடைமுறை மிகவும் கால தாமதமாகிறது என்றும் இதனால் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தொழில் தொடங்க முடியவில்லை என்பால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி வெகுவாக பாதிகபட்டுள்ளது எனக்கருதி நடுவண் அமைச்சர்களுடன் பேசி அக்கூட்டத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அமைச்சரவை கூட்டத்தில் முடிவினை பிரதமரின் ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதன் படி கட்டிட அனுமதி அளிக்கும் அதிகாரம் ஊள்ளாட்சிக்கு அளிக்கவும் விண்ணப்பத்தினை 60 நாட்களுக்குள் பரிசீலித்து உரிய அனுமதி / பதில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் அனுமதி வழங்கபட்டதாக விண்ணப்பதாரர் கருதிக்கொள்ளலாம்.

வனூர்தி நிலையம் அமையுமிடத்திலிருந்து 20 கி.மீ. பகுதிகளுக்கு உரிய நிலைய விரிவக்கா குழுமத்திடம் தடையில்லா சான்று பெற்றும் இந்திய தொல்லியல் துறை வரையறை செய்யப்பட்ட இடத்தில் 100 முதல் 300மீ சுற்றுவட்டப்பாதைக்குள் கட்டப்படும் கட்டமானமாயின் அரசு நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கும் குழுமத்திடம் தடையில்லாச்சான்று பெற்று அனுமதி வழங்க ஆணை வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆணைகள் வெளியிடும்போதுதான் முழு நிலவரம் என்ன நமக்காம பொறுப்புகள் என்ன என்பது நமக்கு தெரியவரும். (ஆதாரம் Times Of India 6.11.2016 நாளிதழ் செய்தி)

எனவே மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி குறித்து அதிகமாக விதிமுறைகளை படியுங்கள் தோழர்களே...

்# சிவதி, 7871336611, TNRDOA

Sunday, November 6, 2016

கட்டிட அனுமதி # வினா எண் 29

சிவதி # நானே கேள்வி நானே பதில் # கட்டிட அனுமதி # வினா எண் 29

கேள்வி - வரைபட அனுமதி வழங்கப்பட்ட கட்டிட ஆணைக்கு செல்லுபடி காலமென்ன?

பதில் - வரைபட அனுமதி பொதுவாக ஓர் ஆண்டுக்காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அனுமதி வாங்கியவர் அக்கால கெடுவிற்குள் கட்டுமானத்தை முடித்திட வேண்டும். அவ்வாறு முடிக்கவில்லை எனில் அவ்வனுமதி செல்லத்தக்கதாக இருக்காது.

சில பேர் அனுமதி வாங்கி வைத்துக்கொண்டு பல நாள் பொருத்து கட்ட ஆரம்பித்தாலோ அல்லது வங்கி கடனை எதிர்நோக்கி கட்டாமல் இருந்தாலோ அக்கால கெடுவிற்குள் தொடங்க முடியவில்லை என்றாலோ அவ்வனுமதி காலாவதியானதாக பொருள்.

மேலும் ஊராட்சி மன்றத்தாலோ அல்லது ஒன்றிய நிர்வாகத்தாலோ கால கெடு நீட்டிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை.

மனுதாரர் புதிதாகத்தான் தமது விண்ணப்பத்தினை வழங்கி மீண்டும் கட்டிட அனுமதிக்கான உரிமத்தொகையினை செலுத்தி அனுமதி பெறவேண்டும்.

இந்நிகழ்வில் Renewal மற்றும்  Revalidate எல்லாம் செல்லுபடியாகாது என்பதை வளர்ச்சித்துறையினை சார்ந்த நாம் அறியவேண்டும். *தமிழ்நாடு கட்டிட விதிகள் சட்டம் 1997 விதி எண் 30* # சிவதி 7871336611  TNRDOA

Thursday, November 3, 2016

கட்டிட அனுமதி - வினா எண் 24

சிவதி: # நானே கேள்வி # நானே பதில் # சிவதி  # கட்டிட அனுமதி - வினா எண்  24
கேள்வி - புற்றீசல் போல மனைப்பிரிவுகள் பெருகி வருகின்றன? இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)மற்றும்.ம. துவ வ அ கடமை என்ன?
பதில் - மனைப்பிரிவு நகர் ஊரமைப்பு துறையால் அங்கிகரிக்கப் படுமானால் நிச்சயமாக அதில் 10% க்கு குறையாமல் OSR land ஊராட்சிக்கு தானபத்திரமாக வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு layoutக்கும் தானபத்திரமாக வழங்கப்பட்ட இடம் ஊராட்சியால் பராமரிக்கப் படவேண்டும்.
AD (Panchayat) மற்றும் Zonal Dy.Bdo  ஊராட்சி ஆய்விற்கு செல்லும் போது ஊராட்சி சொத்துப் பதிவேடு எண். 16ல் ஒப்படைக்கப்பட்ட நிலத்தின் சர்வே எண் மற்றும் விஸ்தீரணம் ஆகியவை குறிப்பிட்டுள்ளதை கண்காணிக்க வேண்டும்.
அந்த நிலத்திற்கான தானபத்திரத்தை ஆய்வுகுட்படுத்தி, அவை ஆக்கிரமிப்பு இன்றி வேலியிட்டு பராமரிக்கப் படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
பல ஊராட்சிகளில் இது சரியாக பராமரிக்கப்படுதில்லை என்ற குறைகள் உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில கணக்காயர் தணிக்கைத்தடையில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஊராட்சிக்கென புதிய கட்டிடங்கள் வரும் போது பொதுவாக நீர்நிலை ஓரமாக கட்டுவதை தவிர்த்து இது போன்று ஊராட்சி ஒப்படைப்பட்ட இடத்தை பயன்படுத்திக்கொள்வது சிறப்பானது.
நாம் நீர்நிலைகளையும் நமக்கு ஒப்படைபடைக்கப்பட்ட / தானமாக அளிக்கப்பட்ட நிலத்தினையும் ஒருங்கே பாதுகாத்த திருப்தி இருக்கும்
அது போல தனபத்திரமாக வழங்கப்பட்ட பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தின் முத்திரைத்தாள் ஆவணத்தை ஒவ்வொருமுறையும் ஊராட்சியில் சரிபாருங்கள்  # சிவதி. 7871336611

Monday, October 31, 2016

நானே கேள்வி நானே பதில் வினா எண் 18

நானே கேள்வி # நானே பதில் # சிவதி./ தொழில் உரிமம் - வினா எண்  18

கேள்வி – தோழர் வணக்கம். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் உரிம்ம் கோரி விண்ணப்பிக்கும் போது நாம் கோப்பினை எப்படி சரிபார்ப்பது?

சிவதி பதில் – ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பல அலுவலருக்கு இதில் பல ஐயம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஒரு நிறுவனத்திற்கு உரிம்ம் அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புள்ள நேர்வு என்பதால் இதில் நமது அலுவலர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. முதலில் கீழ்கண்டுள்ள இனங்கள் அதில உள்ளனவா என்பதை ஆய்வு செய்யுங்கள்.

1.     அந்த நிறுவனத்தின் கட்டிடம் கட்ட  நகர்புற ஊரமைப்பு துறையினரின் தொழில் நுட்ப அனுமதி (DTCP approval)

2.     மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று (Pollution NOC)

3.     தொழிற்சாலைகளின் ஆய்வாளரிடமிருந்து தடையின்மை சான்று (Inspector of factories NOC)

4.     சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் இருந்து தடையின்மை சான்று (DD Health NOC)

5.     தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று

6.     காவல் துறையின் தடையின்மை சான்று (நேர்வுக்கு ஏற்ப)

7.     மாவட்ட தொழில் மையத்தின் சான்று

8.     அந்த நிறுவனம் சிப்காட்டில் இருக்குமானால் சிப்காட் பொறுப்பு அலுவலரின் தடையின்மை சான்று / கடிதம்

9.     எத்தனை குதிரைத்திரன் கொண்டுள்ள இயந்திரம் மூலம் பொருட்கள் / நிறுவனம் இயங்கவிருக்கிறது என்ற விவரம்

10.  பெரு நிறுவனம் எனில் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்ட தொழில் நுட்ப அனுமதியுடன் கூடிய வரைபடம் இவை அனைத்தும் சரியாக இருக்குமாயின் ஆணையர் ஒன்றியக்குழுவிற்கு பரிந்துரை செய்து ஒன்றியக்குழு தலைவர் மூலம் மன்ற கூட்டத்தில் வைத்து அனுமதி கோருதலே சரியான நடைமுறையாகும்.

(இப்போது தனி அலுவலருக்கான நடைமுறை என்பதை கருத்தில் கோள்ளவும்)

மேற்படி சான்றிதழ்கள் நேர்வுக்கு ஏற்றார்போல் ஒன்றிய அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். நிறுவனத்த்தின் அமைவிடம் தனேயே இருக்குமாயின் அணுகு சாலையின் பராமரிப்புக்கான கட்டனத்தை அரசிதழின்படி தொழில் உரிமத்திற்காக நாம் நிர்னயிக்கும் கட்டணத்துடன் சேர்த்து கேட்பு ஆணை கோரலாம். # சிவதி. 7871336611

Monday, October 24, 2016

நானே கேள்வி நானே பதில் - 15

சிவதி: நானே கேள்வி # நானே பதில் # சிவதி # காஞ்சிபுரம் # வரைபட அனுமதி - வினா எண் 15
கேள்வி - எத்தனை சதுர அடி வரையில் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் குடியிருப்பு / வணிக கட்டிடத்திற்கு கட்டிடம் கட்ட திட்ட அனுமதி அளிக்கலாம் ?
பதில் - கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கும் அதிகாரம் BDO வுக்கு இல்லை. 4000 சதுர அடிக்குள் விதிமுறைகளுக்குட்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும் அதற்கு மேல் நகர்புற ஊரமைப்பு துறை அலுவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
CMDA சென்னை புறநகர் பகுதியில் மட்டும் கட்டிட திட்ட அனுமதி வழங்க தமது அதிகாரத்தை ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பகிர்ந்துள்ளது.
எனவே கட்டிடம் கட்ட திட்ட அனுமதி அளித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர் தோழர்களே!

# சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம்

மனைப்பிரிவு - வினா எண் -5

சிவதி: நானே கேள்வி# நானே பதில் - சிவ.தினகரன் / கட்டிட அனுமதி -  வினா எண் 5

கே- ஒரு லேஅவுட்டில் காலி இடம் விடவேண்டுமா?

பதில் - ஆம். தமிழ்நாடு கட்டிட விதிகளின் படி ஒரு மனைப்பிரிவில் ( லே அவுட்டில்) 10க்கும் மேற்பட்ட மனைகள் இருக்கவேண்டும்.

அதில் பூங்கா , விளையாட்டு மைதானம் (அ) பொழுதுபோக்கு தளம் ஆகிய பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் பகுதிகள் மொத்த லேஅவுட் விஸ்தீரணத்தில் 10%க்கு குறையாமல் அமைந்து இருக்க  வேண்டும் - சிவ. தினகரன் TNRDOA, 7871336611

நானே கேள்வி நானே பதில் வினா எண் - 4

சிவதி: * நானே கேள்வி * நானே பதில் * - சிவ. தினகரன் # கட்டிட அனுமதி / வினா எண் -4

கேள்வி - நான் ஒரு லே அவுட் விளம்பரத்தை நாளிதழில் பார்த்தேன். அதில் ஊராட்சியால் அங்கிகரிக்கப்பட்ட மனைப்பிரிவு என இருந்தது. லே அவுட் காபியில் village pt. தீர்மான எண்ணுடன் கிராம  ஊராட்சி  தலைவரின் கையெப்பமும் இருந்தது. நான் அம்மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கலாமா?


பதில் - அம்மனையினை தயவு செய்து வாங்க வேண்டாம்.  DRD, D.O. lrன் படி (ந.க. எண். 83921/03/PH2, Dt. 14.11.2003) நகர் ஊரமைப்பு இயக்குனரின் தொழில்நுட்ப அனுமதி இன்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு எவ்விதமான மனைப்பிரிவு அனுமதியும் வழங்க அதிகாரமில்லை.

 பஞ்சாயித்து அனுமதி பெற்ற லே அவுட் என்ற விளம்ரங்கள் மக்களை ஏமாற்றும் அப்பட்டமான மோசடி. - சிவ.தினகரன், TNRDOA, 7871336611

நானே கேள்வி நானே பதில் - 12

நானே கேள்வி # நானே பதில் # சிவதி # கட்டிட அனுமதி # வினா எண் 12

கேள்வி - இதுக்கு முன்னாடி வாய்க்கால் வரப்பா இருந்த இடம். இப்போ plots போட்டிருக்காங்க. மெயின் ரோடுக்கு பக்கமாவே இருக்கு. அதுல நான் ஒரு பிளாட் வாங்கலாமா?

பதில் - ஆவணங்களை சரிபார்த்து வாங்குங்கள்.

உள்ளூர் திட்டக் குழுமத்தின் limit-ல்

உள்ள இடங்கள் பல zone-களாக பிரிக்கப்பட்டிருக்கும்.

1. Residential Zone - குடியிருப்பு பகுதி

2. Commercial Zone - வர்த்தகம் அல்லது வணிகப் பகுதி

3. Industrial Zone - தொழிற்சாலை பகுதி

4. Educational use Zone - கல்வி நிறுவனங்கள் பகுதி

5. Public and Semi Public use Zone

6. Agricultural Zone - விவசாய பகுதி

இதில் Residential Zone-ல் வரும் இடத்தை மட்டும் தான் வீட்டு மனைகளாகப்

பிரித்து அங்கீகாரம் பெற முடியும். மற்ற Zone-ல் உள்ள இடத்தினை வீட்டு

மனைகளாக பிரிக்க வேண்டும் என்றால், அரசாங்கத்துக்கு மனு செய்து முதலில்

Zone மாற்றம் (Conversion) செய்ய வேண்டும்.

அப்படி மாத்தினா மட்டுந்தான் விவசாய நிலை குடியிருப்பு பகுதியா மாறும்னு நினைவுல வச்சுக்குங்க # சிவதி#7871336611