Monday, November 14, 2016
அடிப்படை விதிகள் - வினா எண் 37
Monday, November 7, 2016
கட்டிட அனுமதி - வினா எண் 30
நானே கேள்வி # நானே பதில் # சிவதி- கட்டிட அனுமதி - வினா எண் 30
கேள்வி - கட்டிட அனுமதி குறித்து ஏதேனும் சிறப்பு செய்தி உண்டா?
பதில் - உண்டு, தொழில் முதலீடு மற்றும் கட்டிடவியலார் நூற்றாண்டு விழாக்கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட நடுவண் அரசின் நகர்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கய்யா ஒரு செய்தியினை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் பெருநகர திட்டக்குழுமம் மற்றும் நகர் புற ஊரமைப்பு இயக்ககத்திடம் கட்டிட அனுமதி பெறும் பொருட்டு விண்ணபித்து அனுமதி பெறும் நடைமுறை மிகவும் கால தாமதமாகிறது என்றும் இதனால் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தொழில் தொடங்க முடியவில்லை என்பால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி வெகுவாக பாதிகபட்டுள்ளது எனக்கருதி நடுவண் அமைச்சர்களுடன் பேசி அக்கூட்டத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் முடிவினை பிரதமரின் ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதன் படி கட்டிட அனுமதி அளிக்கும் அதிகாரம் ஊள்ளாட்சிக்கு அளிக்கவும் விண்ணப்பத்தினை 60 நாட்களுக்குள் பரிசீலித்து உரிய அனுமதி / பதில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் அனுமதி வழங்கபட்டதாக விண்ணப்பதாரர் கருதிக்கொள்ளலாம்.
வனூர்தி நிலையம் அமையுமிடத்திலிருந்து 20 கி.மீ. பகுதிகளுக்கு உரிய நிலைய விரிவக்கா குழுமத்திடம் தடையில்லா சான்று பெற்றும் இந்திய தொல்லியல் துறை வரையறை செய்யப்பட்ட இடத்தில் 100 முதல் 300மீ சுற்றுவட்டப்பாதைக்குள் கட்டப்படும் கட்டமானமாயின் அரசு நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கும் குழுமத்திடம் தடையில்லாச்சான்று பெற்று அனுமதி வழங்க ஆணை வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆணைகள் வெளியிடும்போதுதான் முழு நிலவரம் என்ன நமக்காம பொறுப்புகள் என்ன என்பது நமக்கு தெரியவரும். (ஆதாரம் Times Of India 6.11.2016 நாளிதழ் செய்தி)
எனவே மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி குறித்து அதிகமாக விதிமுறைகளை படியுங்கள் தோழர்களே...
்# சிவதி, 7871336611, TNRDOA
Sunday, November 6, 2016
கட்டிட அனுமதி # வினா எண் 29
சிவதி # நானே கேள்வி நானே பதில் # கட்டிட அனுமதி # வினா எண் 29
கேள்வி - வரைபட அனுமதி வழங்கப்பட்ட கட்டிட ஆணைக்கு செல்லுபடி காலமென்ன?
பதில் - வரைபட அனுமதி பொதுவாக ஓர் ஆண்டுக்காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அனுமதி வாங்கியவர் அக்கால கெடுவிற்குள் கட்டுமானத்தை முடித்திட வேண்டும். அவ்வாறு முடிக்கவில்லை எனில் அவ்வனுமதி செல்லத்தக்கதாக இருக்காது.
சில பேர் அனுமதி வாங்கி வைத்துக்கொண்டு பல நாள் பொருத்து கட்ட ஆரம்பித்தாலோ அல்லது வங்கி கடனை எதிர்நோக்கி கட்டாமல் இருந்தாலோ அக்கால கெடுவிற்குள் தொடங்க முடியவில்லை என்றாலோ அவ்வனுமதி காலாவதியானதாக பொருள்.
மேலும் ஊராட்சி மன்றத்தாலோ அல்லது ஒன்றிய நிர்வாகத்தாலோ கால கெடு நீட்டிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை.
மனுதாரர் புதிதாகத்தான் தமது விண்ணப்பத்தினை வழங்கி மீண்டும் கட்டிட அனுமதிக்கான உரிமத்தொகையினை செலுத்தி அனுமதி பெறவேண்டும்.
இந்நிகழ்வில் Renewal மற்றும் Revalidate எல்லாம் செல்லுபடியாகாது என்பதை வளர்ச்சித்துறையினை சார்ந்த நாம் அறியவேண்டும். *தமிழ்நாடு கட்டிட விதிகள் சட்டம் 1997 விதி எண் 30* # சிவதி 7871336611 TNRDOA
வளர்ச்சித்துறை / - வினா எண் 28
சிவதி: நானே கேள்வி # நானே பதில் # சிவதி # வளர்ச்சித்துறை / - வினா எண் 28
கேள்வி - அய்யா தான் ஒரு ஊர் நல அலுவலர். ஒரு கட்டிடப்பணியின் தற்போது நிலையினை கவனிக்க பணிக்கப் பட்டேன். தற்போது அங்கே கட்டிடத்தின் பூச்சு வேலைப்பணி நடை பெற்று வருகிறது. நான் என்ன என்ன கவனிக்க வேண்டும்?
பதில் - பூச்சுவேலை எனப்படும் plastering பணி கிட்டத்தட்ட கட்டப்பணியின் இறுதி கட்ட நிலை.
கட்டிடத்தின் வெளிப்புற வெப்பம் மற்றும் ஈரத்தன்மையில் இருந்து காப்பாற்றுவது பூச்சு வேலைதான்.
பின்வரும் நடைமுறைகள் பின்பற்றுகிறார்களா என களப்பணியில் உறுதி செய்யுங்கள்
பூச்சு வேலைக்கு முன்பு brick wallஐ நீரால் நன்கு நனைத்திட வேண்டும்.
plastering work சுவற்றின் மேலிருந்து கீழாக செய்வதே முறையானதாக இருக்கும்.
பூச்சுவேலை முடிக்கப்பட்ட பகுதியை 10 முதல் 12 நாட்கள் தண்ணீரில் நனைக்க வேண்டும்.
சுவற்றிற்கு சிமெண்ட் மணல் கலவை 1;5 என 12 முதல் 15 mmம்
roofன் அடிப்புறம் எனில் 1;3 என 10 mm 12mm கனத்திற்கு பூசவேண்டும்.
இதயெல்லாம் கூட நாம தெரிஞ்சுக்கனம் RWO Sir...
# சிவதி. TNRDOA 7871336611
Friday, November 4, 2016
அலுவலக நிர்வாகம் - வினா எண் 25
கேள்வி – பகிர்மானப்பதிவேடு பற்றி விளக்குங்களேன்……
சிவதி பதில் – ம்…… இதை திறந்து பார்த்தால் சில எழுத்தர்களுக்கு ‘பகிர்’ பகிர்’னு மானம் போயுடும் அதனாலதான் பகிர்மானப்பதிவேடுன்னு பேரு வச்சாங்கலான்னு தெரியல…..
இந்த பதிவேடு சனவரி முதல் வேலை நாள் அன்று முதல் கடிதங்கள் எண்ணிட்டு பராமரிக்கும் பதிவேடு… பராமரிக்கும் முன் சில பக்கங்களை காலியாக விட்டு விட்டு எண்ணிட்டு தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 1, 11,21 ஆகிய மூன்று நாட்கள் அலுவலக தலைவர் இந்த இணைப்பு எண்கள் பதியப்பட்டதை ஆய்வு செயவது அவரது முக்கிய கடமையாகும்.
தான பத்திரம், காசோலை, பிற முக்கிய ஆவணங்கள் வரும் கடித விவரங்கள் பதிவேட்டின் 2வது கலத்தில் குறித்து வைத்தல் வேண்டும்.
. நாள்தோறும் பெறப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் எண்ணிடப்ப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் ஒத்திசைவு செய்து பிரிவுத்தலைவர் ஒப்பமிடவேண்டும்
மொத்த்த்தில் சுருக்கமாக சொன்னால் ஒரு அலுவலத்தின் உயர்நாடியே பகிர்மான பதிவேடுதான்.
Thursday, November 3, 2016
கட்டிட அனுமதி - வினா எண் 24
அந்த நிலத்திற்கான தானபத்திரத்தை ஆய்வுகுட்படுத்தி, அவை ஆக்கிரமிப்பு இன்றி வேலியிட்டு பராமரிக்கப் படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 23
நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 23
கேள்வி - ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கிறது. அவர் இன்னும் நான்கு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார். அவருக்கு ஓய்வூதிய பிரேரணை விண்ணப்பத்தினை மாநிக கணக்காயருக்கு அனுப்பலாமா?
பதில் - அனுப்ப முடியாது. ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகள் முடிவுற்றால்தான் நாம் பிரேரணையினை அனுப்ப முடியும். ஒரு வேலை நீங்கள் பிரேரணை அனுப்பிய பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால் உடனடியாக மாநில கணக்காயருக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆதாரம் Govt Lr. No. 69332/Pension/93-2 fnance Dt 16.8.93 # சிவதி, TNRDOA, 7871336611
நானே கேள்வி # நானே பதில் # சிவதி - தொழில்நுட்பம் - வினா எண் 22
நானே கேள்வி # நானே பதில் # சிவதி - தொழில்நுட்பம் - வினா எண் 22
கேள்வி – கணினியில் எக்செல் work sheetல் பணிபுரியும் போது அடுத்தடுத்த கலத்தில் பதிவிடும் விவரங்களை மொத்தமாக சேர்த்து ஒரு கலத்தில் கொண்டு வருவது எப்படி? Copy and past தனித்தனியே செய்யாமல் கொண்டு வர முடியுமா?
சிவதி பதில் – நிச்சயமாக முடியும். மைக்ரோசாப்ட் எக்செல் sheetல் முடியாத்து என்று எதுவும் இல்லை. நீங்கள் கேட்பது இதுதானே… அதாவாது ஒரு coloumn ல் வீட்டு எண்ணும் மற்று ஒரு columnல் தெரு பெயரும் மற்றொரு கலத்தில் ஊர் பெயரும் உள்ளதென வைத்துக்கொள்வோம். இப்போது வீட்டு எண்ணுடன் தெருப்பெயர் மற்றும் ஊர் பெயர் தனியே ஒரு கலத்தில் வர வேண்டும்.
இதற்கு நீங்கள் ஒரு சாதாரண formula apply செய்தாலே போதுமானது. இந்த இடத்தில் cut and paste போன்ற நடைமுறைகள் ஏதும் கை கொடுக்காது.
எந்த கலத்தில் மொத்த விரவங்கள் வேண்டுமோ அந்த இடத்தில் =CONCATENATE என தட்டச்சு செய்து அடைப்பு குறிக்குள் மற்ற காலத்தின் மதிப்பீடுகளை cell no. இடுவதின் மூலம் அந்த கட்டத்தில் அனைத்தையும் பெற முடியும். எ.கா. =CONCATENATE(D8,C8,B8) என்பது போன்றவையாகும்.
முயற்சி செய்து பாருங்கள் பல இக்கட்டான விவரங்கள் மேல் அலுவலகத்திலிருந்து நம்மை கோரும் போது இது பயன்படும். கணினி கற்பது ஓர் அலாதியான அனுபவம் தோழர்களே. அதனை கசடற கற்போம்# சிவதி.7871336611
#நானே கேள்வி # நானே பதில் # சிவதி# வளர்ச்சித்துறை - - வினா எண் 21
Monday, October 31, 2016
ஊரக வளர்ச்சி / - வினா எண் 19
நானே கேள்வி நானே பதில் வினா எண் 18
நானே கேள்வி # நானே பதில் # சிவதி./ தொழில் உரிமம் - வினா எண் 18
கேள்வி – தோழர் வணக்கம். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் உரிம்ம் கோரி விண்ணப்பிக்கும் போது நாம் கோப்பினை எப்படி சரிபார்ப்பது?
சிவதி பதில் – ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பல அலுவலருக்கு இதில் பல ஐயம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஒரு நிறுவனத்திற்கு உரிம்ம் அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புள்ள நேர்வு என்பதால் இதில் நமது அலுவலர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. முதலில் கீழ்கண்டுள்ள இனங்கள் அதில உள்ளனவா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
1. அந்த நிறுவனத்தின் கட்டிடம் கட்ட நகர்புற ஊரமைப்பு துறையினரின் தொழில் நுட்ப அனுமதி (DTCP approval)
2. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று (Pollution NOC)
3. தொழிற்சாலைகளின் ஆய்வாளரிடமிருந்து தடையின்மை சான்று (Inspector of factories NOC)
4. சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் இருந்து தடையின்மை சான்று (DD Health NOC)
5. தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று
6. காவல் துறையின் தடையின்மை சான்று (நேர்வுக்கு ஏற்ப)
7. மாவட்ட தொழில் மையத்தின் சான்று
8. அந்த நிறுவனம் சிப்காட்டில் இருக்குமானால் சிப்காட் பொறுப்பு அலுவலரின் தடையின்மை சான்று / கடிதம்
9. எத்தனை குதிரைத்திரன் கொண்டுள்ள இயந்திரம் மூலம் பொருட்கள் / நிறுவனம் இயங்கவிருக்கிறது என்ற விவரம்
10. பெரு நிறுவனம் எனில் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்ட தொழில் நுட்ப அனுமதியுடன் கூடிய வரைபடம் இவை அனைத்தும் சரியாக இருக்குமாயின் ஆணையர் ஒன்றியக்குழுவிற்கு பரிந்துரை செய்து ஒன்றியக்குழு தலைவர் மூலம் மன்ற கூட்டத்தில் வைத்து அனுமதி கோருதலே சரியான நடைமுறையாகும்.
(இப்போது தனி அலுவலருக்கான நடைமுறை என்பதை கருத்தில் கோள்ளவும்)
மேற்படி சான்றிதழ்கள் நேர்வுக்கு ஏற்றார்போல் ஒன்றிய அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். நிறுவனத்த்தின் அமைவிடம் தனேயே இருக்குமாயின் அணுகு சாலையின் பராமரிப்புக்கான கட்டனத்தை அரசிதழின்படி தொழில் உரிமத்திற்காக நாம் நிர்னயிக்கும் கட்டணத்துடன் சேர்த்து கேட்பு ஆணை கோரலாம். # சிவதி. 7871336611
Tuesday, October 25, 2016
அடிப்படை விதிகள் # வினா எண் 17
நானே கேள்வி நானேபதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண். 17
கேள்வி - பணிக்காலத்தில் அரசு ஊழியர் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு உடனடியாக செய்க்கூடிய அரசு சலுகை என்ன?
பதில் - இறந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு ஈமச்சடங்கு தொகையாக ரூ.5000/- (ஐந்தாயிரம் மட்டும்) வழங்கலாம். இத்தொகையினை அரசு ஊழியர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடத்தில் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.
இதற்கென அலுவலுகத் தலைவர் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. தன்னிடம் கையிருப்பில் உள்ள எவ்விதமான நிதியிலிருந்தும் வழங்கலாம். பின்னர் பட்டியல் அனுப்பி ஈடு செய்ய வேண்டும். (இந்த இடத்தில் அலுவலகத் தலைவர் கருணையுடனும் அதே நேரத்தில் திறமையாகவும் செயல்பட வேண்டும்)
குடும்ப நல நிதித்தொகை கணக்கில் பற்று எழுதி அவரது குடும் நல நிதித்தொகை பெறும் போது அதில் ஈடு செய்ய பட்டியல் அனுப்ப வேண்டும். அந்த தொகையினை பெற உரிமை உள்ளவர் மற்ற பட்டியலில் பிடித்தம் செய்யக் கோரினாலும் அவ்வாறு பிடித்தம் செய்து கொள்ளலாம்.
அரசு கடிதம் எண். 63811/ ஓய்வூதியம்/92-1 நிதித்துறை நாள். 15.7.1992 # சிவதி,TNRDOA, 7871336611
Monday, October 24, 2016
நானே கேள்வி நானே பதில் - 15
நானே கேள்வி # நானே பதில் - வினா எண் 14
நானே கேள்வி நானே பதில் - வினா எண் 2
கேள்வி - உள்ளாட்சியில் பகிரங்க ஏலம் விடும்போது ஏல நோட்டீசில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?
சிவதி பதில் - பொதுவாக ஊராட்சிகளில் ஏலம் விடுவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை.
ஆனால் உரிய நடைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. முடிந்த வரையில் இதனை மூன்று கேள்வி பதில்களில் நிறைவு செய்கிறேன். மொதல்ல பத்து point note பன்னுங்கப்பா….
1. முதலில் ஏலம் விடும் உத்தேசித்த பத்து தினங்களுக்குள் நோட்டீஸ் அனுப்பனும். அதுக்காக 20 நாட்கள் முன்னதாகவே அறிவிப்பு செய்யக்கூடாது.
2. அது கிராம ஊராட்சியோ அல்லது வட்டார ஊராட்சியோ தொடர்பான ஊராட்சியின் மன்ற ஒப்புதல் பெறனும்… சரியா…
3. ஏலம் நடக்கும் இடம், நேரம், தேதி ஆகியவையும் அது யாரால் நடத்தப்பெறும் என்ற விவரமும் நோட்டீசில் இருக்கனுமுங்க…
4. நோட்டீசில் எந்த கால கெடுவிற்குள் இந்த ஏல ஒப்பந்தம் நடைபெறும் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.
5. பாதுகாப்பு வைப்புத் தொகை எவ்வளவு என்பது அந்த நோட்டீசில் இருக்கனும்ங்க…
6. ஒருத்தர் ஏலம் எடுக்கிறார்னு வச்சுக்குவோம்… அவர் எவ்வளவு தொகை செலுத்தனும் அத எப்புடி செலுத்தனும்னு தெளிவா நோட்டீசுல தெரிவிக்கனும்.
7. ஏலத்தில் கலந்து கொள்வோர் கடந்த முறை நடந்த ஏலத்தில் அவர்களின் செயல்முறைகளை பரிசீலித்து அவர் பெயர் black listல் இருக்கிறாரா என்பதையும் பணம் ஏதும் நிலுவை வைத்துள்ளாரா என்பதை கண்காணித்து அவரை ஏலத்தில் பங்கு கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.
8. ஏலத்தின் நேர்வுக்கு ஏற்றார் போல சொத்து சான்று கோரலாம்.
9. ஏலம் எடுத்தவுடன் விண்ணப்பதாரர் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை ஏல நோட்டீசில் தெளிவா குறிப்பிடனும்.
10. ஏலத்திற்கான பட்டியல் தொகை (schedule) தொகை எவ்வளவுன்னு தெரிவிக்கனும். ஏலம் எடுத்தவர் தொகையை எத்தனை தவனையா செலுத்தலாம்.. இல்ல ஒரே தவனையா செலுத்தலாமான்னு தெரிவிக்கனும். Scheduleக்கு vat உண்டு…. மறந்துடாதீங்கண்ணே அப்புறம் வருத்தப்படூவீக…..
மேலும் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றியும் இந்த ஏலம் ரத்து செய்ய ஏலம் நடத்தும் செயல் அலுவலருக்கு உரிமை உண்டுன்னு ஒரு அறிவிப்பு அதுல இடம் பெறனும்.
இன்னும் பல விவரம் இருக்கு அடுத்த கேள்வியில அது வரும்…. – சிவதி. TNRDOA 7871336611
மனைப்பிரிவு - வினா எண் -5
கே- ஒரு லேஅவுட்டில் காலி இடம் விடவேண்டுமா?
பதில் - ஆம். தமிழ்நாடு கட்டிட விதிகளின் படி ஒரு மனைப்பிரிவில் ( லே அவுட்டில்) 10க்கும் மேற்பட்ட மனைகள் இருக்கவேண்டும்.
அதில் பூங்கா , விளையாட்டு மைதானம் (அ) பொழுதுபோக்கு தளம் ஆகிய பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் பகுதிகள் மொத்த லேஅவுட் விஸ்தீரணத்தில் 10%க்கு குறையாமல் அமைந்து இருக்க வேண்டும் - சிவ. தினகரன் TNRDOA, 7871336611
நானே கேள்வி # நானே பதில் # வினா எண் 6
கேள்வி - ஊராட்சிகளில் எப்படி ஏலம் நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்?
சிவதி பதில் – முதலில் ஊராட்சி என்பது பொதுப்பெயர் என்பதை அறிக.
அது வட்டாரமாகட்டும் கிராமம் ஆகட்டும் இல்லைன்னா மாவட்டம் ஆகட்டும் சட்டப்படி எல்லாம் ஊராட்சிதான்.
1. ஊராட்சியில் ஏல அறிவிப்பு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்
2. ஒரு வேலை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலம் எனில் அது எந்த ஊராட்சி ஊராட்சி பகுதியை சார்ந்ததோ அந்த கிராம ஊராட்சியிலும் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
3. மக்கள் கூடும் இடம் சந்தை, வழிபாட்டு தளம், சாவடி என விளம்பரம் செய்யலாம்.
4. மூன்று மணி நேரம் முன்னதாக தண்டோரா போடவேண்டும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்டோரா போடும் மூறை வழங்கொழிந்து விட்டதால் ஆட்டோவில் மைக் மூலம் அறிவிக்கலாம்.
5. ஏலம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் அது தொடர்பான கோப்பில் கரும சிரத்தையுடன் தொகுக்க வேண்டும்.
6. ஏலம் விடக்கூடிய பொருள் தொடர்பான முகவர்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளம்பர அறிக்கை சேர்த்தல் வேண்டும்.
7. ஏலத்தொகை ரொக்கமாகவா அல்லது வங்கிவரைவா அல்லது பிற வகையிலா என்பது தெளிவாக நோட்டீசில் குறிப்பிட வேண்டும்
8. ஏலம் நடைபெறவிருக்கும் நாளில் இருந்து 7 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் விளம்பரம் அரசிதழில் பிரசுரிக்க வேண்டும்.
9. ஏலத்தின் மொத்த தொகை 10 ஆயிரத்திற்குள் எனில் மாவட்ட அரசிதழிலும்
10க்கு மேல் எனில் நாளிதழிலும் விளம்பரம் செய்ய வேண்டும்.
10. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எல்லோராலும் இந்த விவரங்கள் கேட்க முடியும் என்பதால் நிச்சயமாக ஒளிவு மறைவற்ற தன்மை ஏல விளம்பர அறிவிப்பில் தேவை…..
அடுத்த கேள்வி பதிலில் ஏலம் தொடர்பான இதர முக்கிய விவரங்கள் முடித்துக்கொள்கிறேன். – சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம் 7871336611
நானே கேள்வி 3 நானே பதில் # சிவதி - வினா எண் 8
கேள்வி - அய்யா வணக்கம் நான் ஊராட்சி உதவியாளராக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது இ.நி.உ. ஆக பணிபுரிந்து வருகிறேன். நான் ஊராட்சி ஊராட்சி செயலராக இருந்த போதே துறைத் தேர்வுகளில் மூன்று பாடங்கள் தேர்வடைந்துவிட்டேன். என்னுடைய பதவி உயர்வுக்கு நானிப்போது இதர தேர்வு மட்டும் எழுதினால் போதும்தானே?
பதில் - ஆமாம். ஒருவர் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு முன்பாக தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை உள்ளது.
எனவே நீங்கள் ஊராட்சி செயலர் பதவியில் தேர்ச்சி அடைந்த பாடங்களை உரிய அடையாளச்சீட்டுடன் பணிப்பதிவேட்டில் அலுவலகத் தலைவரிடம் சான்று பெறுங்கள். நிகர உள்ள பாடங்களை தகுதிகாண் பருவத்திற்குள் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே தேர்ச்சி அடைந்த பாடத்தினை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆதாரம் Rule 15, Tamilnadu State and Subordinate Service Rules) # சிவதி TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் வினா எண் - 4
கேள்வி - நான் ஒரு லே அவுட் விளம்பரத்தை நாளிதழில் பார்த்தேன். அதில் ஊராட்சியால் அங்கிகரிக்கப்பட்ட மனைப்பிரிவு என இருந்தது. லே அவுட் காபியில் village pt. தீர்மான எண்ணுடன் கிராம ஊராட்சி தலைவரின் கையெப்பமும் இருந்தது. நான் அம்மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கலாமா?
பதில் - அம்மனையினை தயவு செய்து வாங்க வேண்டாம். DRD, D.O. lrன் படி (ந.க. எண். 83921/03/PH2, Dt. 14.11.2003) நகர் ஊரமைப்பு இயக்குனரின் தொழில்நுட்ப அனுமதி இன்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு எவ்விதமான மனைப்பிரிவு அனுமதியும் வழங்க அதிகாரமில்லை.
பஞ்சாயித்து அனுமதி பெற்ற லே அவுட் என்ற விளம்ரங்கள் மக்களை ஏமாற்றும் அப்பட்டமான மோசடி. - சிவ.தினகரன், TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் # வினா எண் 9
கேள்வி - தகுதிகாண் பருவம் என்பது அந்த குறிப்பிட்ட நாட்களில் விடுப்பின்றி அலுவலகம் வருவது அப்படித்தானே….
பதில் - இல்லை. அவ்வாறு கருத முடியாது. உங்களது தகுதி காண் பருவத்தில் குற்றச்சாட்டுகள் காரணமாக உங்கள் பணி நிறைவாக இல்லை என உங்கள் அதிகாரி கருதினால் நீங்கள் திறமையற்றவர் என கருதுவாரானால் உங்களது தகுதிகாண் பருவத்தை நீட்டிக்க அவருக்கு உரிமை உண்டு. அது மட்டுமல்ல உங்களை பணியிலிருந்தே விடுவிக்கவும் கூட அவர் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான அதிகாரம் மேல் அலுவலருக்கு வழங்கப் பட்டுள்ளது
ஆதாரம் Rule 27 (C) of Tamil Nadu State and Subordinate Service Rules # சிவதி, TNRDOA, 7871336611