Showing posts with label ஏலம். Show all posts
Showing posts with label ஏலம். Show all posts

Monday, October 24, 2016

நானே கேள்வி நானே பதில் - வினா எண் 2

*நானே கேள்வி * நானே பதில் # சிவதி. TNRDOA/ ஊரக வளர்ச்சி 1/  வினா எண். 2

கேள்வி - உள்ளாட்சியில் பகிரங்க ஏலம் விடும்போது ஏல நோட்டீசில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

 சிவதி பதில் - பொதுவாக ஊராட்சிகளில் ஏலம் விடுவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை.

ஆனால் உரிய நடைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. முடிந்த வரையில் இதனை மூன்று கேள்வி பதில்களில் நிறைவு செய்கிறேன். மொதல்ல பத்து point note பன்னுங்கப்பா….

1. முதலில் ஏலம் விடும் உத்தேசித்த பத்து தினங்களுக்குள் நோட்டீஸ் அனுப்பனும். அதுக்காக 20 நாட்கள் முன்னதாகவே அறிவிப்பு செய்யக்கூடாது.

2. அது கிராம ஊராட்சியோ அல்லது வட்டார ஊராட்சியோ தொடர்பான ஊராட்சியின் மன்ற ஒப்புதல் பெறனும்… சரியா…

3. ஏலம் நடக்கும் இடம், நேரம், தேதி ஆகியவையும் அது யாரால் நடத்தப்பெறும் என்ற விவரமும் நோட்டீசில் இருக்கனுமுங்க…

4. நோட்டீசில் எந்த கால கெடுவிற்குள் இந்த ஏல ஒப்பந்தம் நடைபெறும் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.

5. பாதுகாப்பு வைப்புத் தொகை எவ்வளவு என்பது அந்த நோட்டீசில் இருக்கனும்ங்க…

6. ஒருத்தர் ஏலம் எடுக்கிறார்னு வச்சுக்குவோம்… அவர் எவ்வளவு தொகை செலுத்தனும் அத எப்புடி செலுத்தனும்னு தெளிவா நோட்டீசுல தெரிவிக்கனும்.

7.   ஏலத்தில் கலந்து கொள்வோர் கடந்த முறை நடந்த ஏலத்தில் அவர்களின் செயல்முறைகளை பரிசீலித்து அவர் பெயர் black listல் இருக்கிறாரா என்பதையும் பணம் ஏதும் நிலுவை வைத்துள்ளாரா என்பதை கண்காணித்து அவரை ஏலத்தில் பங்கு கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.

8. ஏலத்தின் நேர்வுக்கு ஏற்றார் போல சொத்து சான்று கோரலாம்.

9. ஏலம் எடுத்தவுடன் விண்ணப்பதாரர் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை ஏல நோட்டீசில் தெளிவா குறிப்பிடனும்.

10. ஏலத்திற்கான பட்டியல் தொகை (schedule) தொகை எவ்வளவுன்னு தெரிவிக்கனும்.  ஏலம் எடுத்தவர் தொகையை எத்தனை தவனையா செலுத்தலாம்.. இல்ல ஒரே தவனையா செலுத்தலாமான்னு தெரிவிக்கனும். Scheduleக்கு vat உண்டு…. மறந்துடாதீங்கண்ணே அப்புறம் வருத்தப்படூவீக…..

மேலும் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றியும் இந்த ஏலம் ரத்து செய்ய ஏலம் நடத்தும் செயல் அலுவலருக்கு உரிமை உண்டுன்னு  ஒரு அறிவிப்பு அதுல இடம் பெறனும்.

இன்னும் பல விவரம் இருக்கு அடுத்த கேள்வியில அது வரும்…. – சிவதி. TNRDOA 7871336611

நானே கேள்வி # நானே பதில் # வினா எண் 6

ஏலம் 2ம் பகுதி.  # நானே கேள்வி # நானே பதில் # சிவதி #  ஊரக வளர்ச்சி /  - 2 வினா எண் 6

கேள்வி - ஊராட்சிகளில் எப்படி ஏலம் நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்?

சிவதி பதில் – முதலில் ஊராட்சி என்பது பொதுப்பெயர் என்பதை அறிக.

அது வட்டாரமாகட்டும் கிராமம் ஆகட்டும் இல்லைன்னா மாவட்டம் ஆகட்டும் சட்டப்படி எல்லாம் ஊராட்சிதான்.

1. ஊராட்சியில் ஏல அறிவிப்பு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்

2. ஒரு வேலை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலம் எனில்  அது எந்த ஊராட்சி ஊராட்சி பகுதியை சார்ந்ததோ அந்த கிராம ஊராட்சியிலும் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

3. மக்கள் கூடும் இடம் சந்தை, வழிபாட்டு தளம், சாவடி என விளம்பரம் செய்யலாம்.

4. மூன்று மணி நேரம் முன்னதாக தண்டோரா போடவேண்டும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்டோரா போடும் மூறை வழங்கொழிந்து விட்டதால் ஆட்டோவில் மைக் மூலம் அறிவிக்கலாம்.

5. ஏலம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் அது தொடர்பான கோப்பில் கரும சிரத்தையுடன் தொகுக்க வேண்டும்.

6. ஏலம் விடக்கூடிய பொருள் தொடர்பான முகவர்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளம்பர அறிக்கை சேர்த்தல் வேண்டும்.

7. ஏலத்தொகை ரொக்கமாகவா அல்லது வங்கிவரைவா அல்லது பிற வகையிலா என்பது தெளிவாக நோட்டீசில் குறிப்பிட வேண்டும்

8. ஏலம் நடைபெறவிருக்கும் நாளில் இருந்து 7 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் விளம்பரம் அரசிதழில் பிரசுரிக்க வேண்டும்.

9. ஏலத்தின் மொத்த தொகை 10 ஆயிரத்திற்குள் எனில் மாவட்ட அரசிதழிலும்

10க்கு மேல் எனில் நாளிதழிலும் விளம்பரம் செய்ய வேண்டும்.

10. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எல்லோராலும் இந்த விவரங்கள் கேட்க முடியும் என்பதால் நிச்சயமாக ஒளிவு மறைவற்ற தன்மை ஏல விளம்பர அறிவிப்பில் தேவை…..

அடுத்த கேள்வி பதிலில் ஏலம் தொடர்பான இதர முக்கிய விவரங்கள் முடித்துக்கொள்கிறேன். – சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம் 7871336611

நானே கேள்வி நானே பதில் - சிவதி - வினா எண் 10

ஏலம் பகுதி 3…..

#. நானே கேள்வி # நானே பதில் # சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம். / ஊரக வளர்ச்சி /  -. வினா எண் 10

கேள்வி – பகிரங்க ஏலம் நட்டத்தப்பெற என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் ?

சிவதி பதில் –

1. கூடுமான வரையில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற அலுவலக வளாகத்திற்குள்தான் ஏலம் நடத்த வேண்டும்

 2.  ஏலம் விடக்கூடிய பொருள் எளிதில் இடம்பெயர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே அவ்விடத்திற்கு அருகாமையில் ஏலம் விடும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்

3.  ஏல நடைமுறை ஒளிவு மறைவு இல்லாத பகிரங்க ஏலமாக அமையவேண்டும்

 4. ஏலம் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த மன்ற குழுவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினருக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்

5. ஏலம் விடும் அலுவலர் ஏலம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே அவ்விடத்தில் இருக்க வேண்டும்

6.  பலவிதமான பொருட்கள் ஏலம் விடுவதாக இருந்தால் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்

 7.  முதலில் ஏலம் விடும் தொகையின் சந்தை மதிப்பின் அடிப்படையில் தொகையினை நிர்ணயித்து பின்னர் ஏலம் விடும்போது அத்தொகையில் இருந்து படிப்படியாக உயர்த்திக்கொண்டே போகும் நடைமுறையின்படி ஏலம் விடப்பட வேண்டும்

8.  வைப்புத்தொகை மற்றும் ஏலத்தொகை பெற்றுக்கொண்டே அடுத்த பொருள் ஏலம் விடவேண்டும். வைப்புத்தொகை செலுத்தாத ஏலம்/குத்தகைதாரரை ஏலத்திற்கு அனுமதிக்கூடாது

9.  ஏல நடைமுறை நாளிலேயே ஏலம் கிடைக்காத நபருக்கு உரிய வைப்புத்தொகையினை திரும்பத்தருதல் வேண்டும். எந்த பண வர்த்தணைக்கும் அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும்

10.   ஏலத்திற்கென வசூல் செய்த தொகையினை ஏல தினத்தன்றோ அல்லது அன்றைய மறு வேலைநாளிலோ உடனடியாக கருவூலத்தில் செலுத்திடல் வேண்டும்.

மேற்படி நடைமுறைகள் ஏலம் மற்றும் குத்தகைகளுக்கு பொருந்தும். மேலும் விவங்களை பெற நினைப்பவர்கள் அரசு ஆணை எண் (G.O. (Ms) No. 277, Rural Development (C-4) Department, Dated 22nd  November, 2001) ல் அறியலாம் (3வது பகுதி முற்றும்) – சிவதி. TNRDOA, 7871336611.