Showing posts with label Daily Hunt. Show all posts
Showing posts with label Daily Hunt. Show all posts

Monday, October 24, 2016

செயலி அறிவோம் - 2

தொழில் நுட்பம் - தொடர் - சிவதி

செயலி அறிவோம் - 2

ஆண்ட்ராய்டு போன் எனில் வாட்ஸ் ஆப் தாண்டிய வேறெந்த செயலியும் இருப்பதாக பல பேர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் பல பயனுள்ள செயலிகள் நம் ஆண்ட்ராய்டில் பொதிந்து கிடக்கின்றன.

அதில் முக்கியமான செயலி டெய்லி ஹன்ட் Daily Hunt.. இதில் ஒரு கல்லில் நான்கு மாங்காய்.

ஆம்.. நீங்கள் செய்தி வாசிக்கலாம்..
புத்தகம் வாசிக்கலம்,
வேலைக்கு படிக்கலாம்..
வேலை வாய்ப்பை தேடலாம்…

ஆனந்த விகடன், நக்கீரன், குங்குமம் உட்பட நடப்பு வாரம், கடந்த வாரம் என புத்தகங்களை டிஜிடல் வெர்சனாக நீங்கள் வாங்கி மொபைலிலேயே படிக்காலம்.  25% மேல் தள்ளுபடியில் நிறைய நூல்கள் கிடைக்கின்றன்.  உங்களிடத்தில் டேப்(TAB) இருந்தால் படிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.

அதற்கான தொகை நீங்கள் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து கூட செலுத்த வேண்டிய தேவையில்லை. உங்களது சிம் கார்டில் இருக்கும் தொகையில் இருந்தே பிடித்துக் கொள்வார்கள். ஒரு ரூபாய்க்கு கூட புத்தகங்கள் கிடைக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அளிக்கும் செயலிகள் பல இருக்கின்றன.  செய்திகளைவிட இதில் கூடுதலாக நாம் காண்பது இலவச புத்தகங்கள். தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் அளிக்கபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பைசா செலவில்லாமல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஆப் லைனில் இருக்கும் போதும் படிக்கலாம். தமிழ் ஆங்கிலம்,மலையாளம் என 15 மொழிகளில் இந்த செயலி இயங்குகிறது.  இப்போதே தரவிரக்கம் செய்து இலவச நூல்களை பெற்று மொபைலில் படித்துப் பாருங்கள்.

புத்தகத்தில் படிக்கும் நேர்த்தி மொபைலில் படிப்பதில் இல்லை என்றாலும் காத்திருக்கும் நேரத்தில் விரும்பியதை படிக்கலாமே…

எத்தனை நாள்தான் Forward  செய்யும் மொக்கை செய்திகளை நாம் படித்துக்கொண்டு இருப்பது.

https://play.google.com/store/apps/details?id=com.eterno இதில் சொடுக்கி உங்கள் திறன்பேசியில் செயலியை நிறுவி தொடருங்கள் உங்கள் வாசிப்பை.

 புதியன விரும்பு என்ற பாரதியின் வாக்கினை பின்தொடர்வோம் # சிவதி, TNRDOA, 7871336611