Showing posts with label அரசு ஊழியர் அடிப்படை விதிகள். Show all posts
Showing posts with label அரசு ஊழியர் அடிப்படை விதிகள். Show all posts

Monday, November 14, 2016

அடிப்படை விதிகள் - வினா எண் 37

நானே கேள்வி # நானே பதில் #  அடிப்படை விதிகள் - வினா எண் 37

கேள்வி - கருணை அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதார் எவ்வளவு படித்திருந்தாலும் அவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம்தான் வழங்கப்படுமா?

பதில் - அலுவலக உதவியாளரோ, ஊராட்சி செயலரோ அல்லது  இரவுக்காவலரோ இறந்தால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு இளநிலை கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடம் வேண்டும் என்று போராடி பெற்ற அரசு ஊழியர் சங்கங்களுக்கும் ஊ. வளர்ச்சித்துறை அ. சங்கத்திற்கும்  முதலில் நன்றியை சொல்லிவிட்டு பதிலினை தொடங்குவது முறையாக இருக்கும்.

கருணை அடிப்படையில் விணப்பபிப்பவர் பொறியில், மருத்துவம், வேளாண்மை, தொழில் நுட்பம் என முடித்தவராக இருப்பாராயின் அதாவாது BE, MBBS, B.Sc.( Agri) …என முடித்திருப்பாராயின் அவரது படிப்புக்கு தகுதியான பணியிடத்தை வழங்க வழி வகை உள்ளது.

ஒருவேளை அந்த துறையில் அவ்வாறு பணியிடம் இல்லை எனில் மாற்றுத்துறைக்கும் பரிந்துரைத்து அவரது படிப்புக்கான பணியிடத்தை பெறலாம்.

உண்மையாகவ சொல்றீங்க… இது சாத்தியமா என்றால். ஆம் சாத்தியம்தான். ஏற்கனவே அரசு G.O.(3D) No. 46, PWD Dt. 7.9.2001 ன் படி கருணை அடிப்படையில் விண்ணப்பித்தவருக்கு உதவிப்பொறியாளர் வழங்கி உத்திரவிட்டுள்ளது. இது பொதுப்பணித்துறையில நடந்தது.

பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இப்போது ஒரு புள்ளி வைத்துள்ளது. 16.9.2006ல் கடித எண் 126/Q1M2006 ன் படி இதுபோன்ற நடைமுறைகள் C மற்றும் D க்கு மட்டுமே பொருந்தும்  என்று கடிதம் அனுப்பியுள்ளது.


அதிகாரிகளின் ஒற்றுமை உலக முதலாளிகளின் ஒற்றுமையைவிட தலைசிறந்தது என்பதை நாம் உணர முடிகிறது. # சிவதி, 7871336611, TNRDOA

Tuesday, November 8, 2016

அலுவலக நடைமுறை # வினா எண் 31

நானே கேள்வி நானே பதில் # சிவதி.- அடிப்படை விதி - அலுவலக நடைமுறை - 31

கேள்வி  - அரசு அலுவலகத்தில் முடிவுற்ற கோப்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

சிவதி பதில் – முடிவுற்ற கோப்புகளை பதிவறைக்கு அடுக்கி வைக்கிறோம் அல்லவா. அந்த கோப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று வைக்க்கூடாது. ஒரு லைப்பர ரியில் புத்தகங்களை அடுக்கி வைப்பதை பார்த்திருக்கீங்க இல்லையா…. அதவாவது செங்குத்தாக ஒன்னு பக்கத்துல ஒன்னு சாய்வாக அடுப்பட்டிருக்குமே… அதுபோல அழகாக நூலகங்களை பின்பற்றி அடுக்கி வைக்கனும். 

ஒன்று மேல ஒன்று என  LIC Building  மாதிரி அடுக்க்கூடாதுங்க. மாவட்ட நிர்வாக நடைமுறை நூல் 103 பத்திய படிச்சுட்டு மீத விவரத்தை தெரிந்து கொள்ளனும். # சிவதி  7871336611

Friday, November 4, 2016

அலுவலக நிர்வாகம் - வினா எண் 25

நானே கேள்வி # நானே பதில் # சிவதி/ அடிப்படை விதி / அலுவலக நிர்வாகம் - வினா எண் 25

கேள்வி – பகிர்மானப்பதிவேடு பற்றி விளக்குங்களேன்……

சிவதி பதில் – ம்…… இதை திறந்து பார்த்தால் சில எழுத்தர்களுக்கு ‘பகிர்’ பகிர்’னு மானம் போயுடும் அதனாலதான் பகிர்மானப்பதிவேடுன்னு பேரு வச்சாங்கலான்னு தெரியல…..
ஆனா… அலுவலக நடைமுறையில இந்த பதிவேட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இது அரசு அலுவலகத்தின் முக்கிய பதிவேடுகளில் ஒன்று.  உண்மையாக பார்த்தால் எந்த ஒரு காகிதமும் கடிதமாக அறிக்கையாக மாறிய பிறகு அதற்கு அலுவலக ஆவண அந்தஸ்த்தை தருவது பகிரமானப் பதிவேடுதான்.

இந்த பதிவேடு சனவரி முதல் வேலை நாள் அன்று முதல் கடிதங்கள் எண்ணிட்டு பராமரிக்கும் பதிவேடு… பராமரிக்கும் முன் சில பக்கங்களை காலியாக விட்டு விட்டு எண்ணிட்டு தொடங்க வேண்டும்.
ஏப்ரல் முதல் வேலை நாளில் நிலுவைக் கோப்புகளின் விவரங்களை அந்த பக்கத்தில் எழுதி பிரிவு தலைவர் மற்றும் அலுவலக தலைவரிடம் ஒப்பம் பெற வேண்டும்.
நடப்பாண்டின் கடித எண்கள் ல் வரிசையாக இடப்படும் எண்கள் number mechine கருவியால் மட்டுமே இடப்பட வேண்டும்.  இந்த கடித எண்கள் தன் பதிவேட்டில் பதியப்பெற்று இணைப்பு எண்கள்  பகிரமானப்பதிவேட்டில் எழுத்தர்கள் குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 1, 11,21 ஆகிய மூன்று நாட்கள் அலுவலக தலைவர்  இந்த இணைப்பு எண்கள் பதியப்பட்டதை ஆய்வு செயவது அவரது முக்கிய கடமையாகும்.

தான பத்திரம், காசோலை, பிற முக்கிய ஆவணங்கள் வரும் கடித விவரங்கள் பதிவேட்டின் 2வது  கலத்தில் குறித்து வைத்தல் வேண்டும்.
. நாள்தோறும் பெறப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் எண்ணிடப்ப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் ஒத்திசைவு செய்து பிரிவுத்தலைவர் ஒப்பமிடவேண்டும்

மொத்த்த்தில் சுருக்கமாக சொன்னால் ஒரு அலுவலத்தின் உயர்நாடியே பகிர்மான பதிவேடுதான்.
பகிர்மானப் பதிவேடும் தன்பதிவேடும் மட்டுமே நாம் வேலை செய்தமைக்கான சான்றாக அதிகாரிகள் அளவிடுகின்றன. எழுத்தர்களே இதில் கவனம் செலுத்துங்கள் # சிவதி.  7871336611

Thursday, November 3, 2016

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 23

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 23

கேள்வி - ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கிறது. அவர் இன்னும் நான்கு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார். அவருக்கு ஓய்வூதிய பிரேரணை விண்ணப்பத்தினை மாநிக கணக்காயருக்கு அனுப்பலாமா?

பதில் -  அனுப்ப முடியாது. ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகள் முடிவுற்றால்தான் நாம் பிரேரணையினை அனுப்ப முடியும். ஒரு வேலை நீங்கள் பிரேரணை அனுப்பிய பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால் உடனடியாக மாநில கணக்காயருக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆதாரம் Govt Lr. No. 69332/Pension/93-2 fnance Dt 16.8.93 # சிவதி, TNRDOA, 7871336611

Tuesday, October 25, 2016

அடிப்படை விதிகள் # வினா எண் 17

நானே கேள்வி நானேபதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண். 17

கேள்வி - பணிக்காலத்தில் அரசு ஊழியர் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு உடனடியாக செய்க்கூடிய அரசு சலுகை என்ன?

பதில் - இறந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு ஈமச்சடங்கு தொகையாக ரூ.5000/- (ஐந்தாயிரம் மட்டும்) வழங்கலாம். இத்தொகையினை அரசு ஊழியர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடத்தில் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.

இதற்கென அலுவலுகத் தலைவர் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. தன்னிடம் கையிருப்பில் உள்ள எவ்விதமான நிதியிலிருந்தும் வழங்கலாம். பின்னர் பட்டியல் அனுப்பி ஈடு செய்ய வேண்டும். (இந்த இடத்தில் அலுவலகத் தலைவர் கருணையுடனும் அதே நேரத்தில் திறமையாகவும் செயல்பட வேண்டும்)

குடும்ப நல நிதித்தொகை கணக்கில் பற்று எழுதி அவரது குடும் நல நிதித்தொகை பெறும் போது அதில் ஈடு செய்ய பட்டியல் அனுப்ப வேண்டும். அந்த தொகையினை பெற உரிமை உள்ளவர் மற்ற பட்டியலில் பிடித்தம் செய்யக் கோரினாலும் அவ்வாறு பிடித்தம் செய்து கொள்ளலாம்.

அரசு கடிதம் எண். 63811/ ஓய்வூதியம்/92-1 நிதித்துறை நாள். 15.7.1992 # சிவதி,TNRDOA, 7871336611

Monday, October 24, 2016

நானே கேள்வி 3 நானே பதில் # சிவதி - வினா எண் 8

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள்  # வினா எண் 8


கேள்வி - அய்யா வணக்கம் நான் ஊராட்சி உதவியாளராக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது இ.நி.உ. ஆக பணிபுரிந்து வருகிறேன். நான் ஊராட்சி ஊராட்சி செயலராக இருந்த போதே துறைத் தேர்வுகளில் மூன்று பாடங்கள் தேர்வடைந்துவிட்டேன்.  என்னுடைய பதவி உயர்வுக்கு நானிப்போது இதர தேர்வு மட்டும் எழுதினால் போதும்தானே?


பதில் - ஆமாம். ஒருவர் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு முன்பாக தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை உள்ளது.
    எனவே நீங்கள் ஊராட்சி செயலர் பதவியில் தேர்ச்சி அடைந்த பாடங்களை உரிய அடையாளச்சீட்டுடன் பணிப்பதிவேட்டில்  அலுவலகத் தலைவரிடம் சான்று பெறுங்கள். நிகர உள்ள பாடங்களை தகுதிகாண் பருவத்திற்குள் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே தேர்ச்சி அடைந்த பாடத்தினை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.  ஆதாரம்  Rule 15, Tamilnadu State and Subordinate Service Rules) # சிவதி TNRDOA, 7871336611

நானே கேள்வி நானே பதில் # வினா எண் 9

நானே கேள்வி நானே பதில் # சிவதி  - அடிப்படை விதிகள் வினா எண்.  9


கேள்வி - தகுதிகாண் பருவம் என்பது அந்த குறிப்பிட்ட நாட்களில் விடுப்பின்றி அலுவலகம் வருவது அப்படித்தானே….


பதில் - இல்லை. அவ்வாறு கருத முடியாது. உங்களது தகுதி காண் பருவத்தில் குற்றச்சாட்டுகள் காரணமாக உங்கள் பணி நிறைவாக இல்லை என உங்கள் அதிகாரி கருதினால் நீங்கள் திறமையற்றவர் என கருதுவாரானால் உங்களது தகுதிகாண் பருவத்தை நீட்டிக்க அவருக்கு உரிமை உண்டு. அது மட்டுமல்ல உங்களை பணியிலிருந்தே விடுவிக்கவும் கூட அவர் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான அதிகாரம் மேல் அலுவலருக்கு வழங்கப் பட்டுள்ளது


ஆதாரம் Rule 27 (C)  of Tamil Nadu State and Subordinate Service Rules # சிவதி, TNRDOA, 7871336611

நானே கேள்வி நானே பதில் - வினா எண் -7

நானே கேள்வி # நானே பதில் # சிவதி - அடிப்படை விதிகள் - வினா எண் 7


கேள்வி - நைனா...நைனா… Undisbursed Pay Register  அப்படின்னா என்னா நைனா..

பதில் - நல்ல வேளை. இப்போவாவது கேட்டியே. கருவூலத்தில இருந்து நீ எந்த பட்டியல் தொகை வாங்கி வந்தாலும் அந்த தொகைய உரியவர் கிட்ட கொடுத்து ஒப்புதல் வாங்கனும். கூடுமான வரைக்கும் அன்றய நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கனும்.

ஒரு வேளை உன்னால கொடுக்க முடியாத மாதிரி சந்தர்பம் வந்ததுன்னா அதை Undisbursed Pay Registerல எழுதி பதியனும். இதுக்கும் ஒரு கால கெடு உண்டு அத மூனு மாசம் வரைக்கும் வச்சிருக்காலம். அதுக்கும் மேல அந்த தொகைய கொடுக்க முடியலைன்னா அத கருவூலத்துல அதாம் டிரெஷெரியில கட்டிறனும். புரிஞ்சுதா.

இப்போ பெரும்பாலும் ECS  இருக்கு அதனால இது போன்ற நிகழ்வு வர்ரதில்லை. ஆனால சில பட்டியலுக்கு இது மாதிரி நேர்வு வரும் . அப்போ இதை மிகச்சரியாக கடைபிடிக்கனும். S.R. 26 T.R.10, TAMILNADU TREASURY CODE VOL 1) # சிவதி, TNRDOA, 7871336611

நானே கேள்வி # நானே பதில் - அடிப்படை விதிகள் -2 # வினா எண் 3

நானே கேள்வி  # நானே பதில் # சிவதி, அடிப்படை விதிகள் வினா எண் 3


கேள்வி - தகுதிகாண் பருவத்தில் விடுப்பு எடுக்கலாமா?


சிவதி பதில் - தற்செயல் விடுப்பு எடுத்தால் பிழையொன்றும் இல்லை. . தாராளமாக எடுக்கலாம் அது தவிர்த்த பிற விடுப்புகள் அனைத்தும் தகுதிகாண் பருவத்தில் எடுத்தால் உங்கள் தகுதிகாண் பருவம் தள்ளிப் போகும். அது மட்டுமல்ல அவ்விடுப்புகள் அரசு விடுமை நாளுடன் சேர்த்து எடுத்தால் அதுவும் கணக்கீடு செய்யப்பட்டு தகுதிகாண் பருவம் தள்ளிப்போகும் என்பதை உணர வேண்டும். இது உங்களோட அடிப்படை விதியிலேயே இருக்குங்க.. படிச்சுப்பாருங்க. தெரியும் # சிவதி TNRDOA, 7871336611

நானே கேள்வி நானே பதில் - 1

நானே கேள்வி நானே பதில் # சிவதி . அடிப்படை விதிகள் - வினா 1


கேள்வி - ஒரு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது தீடீரென இறந்துவிட்டார்.  அவரது குடும்ப ஓய்வூதியம் பற்றி…


சிவதி பதில் - குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பணிக்காலத்தில் இறந்துவிட்டால் முதலில் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கக் கொள்ளப்பட்டதாக கருத வேண்டும். எனவே அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கலாம்.

ஆதாரம் அரசாணை எண். 2999, Public (Ser-B) Det dt. 4.12.1969 # சிவதி TNRDOA, 7871336611