சிவதி: *நானே கேள்வி நானே பதில்* சிவதி* ஊரக வளர்ச்சி / - வினா எண் 19
கேள்வி – இது மழைக்காலம் …… சாலையில் உள்ள பாலங்களை (Bridges) பற்றி தெரிஞ்சுக்கலாமா?....
பதில் – நிச்சயமா….. வளர்ச்சித்துறையில இருக்கிற நாம எல்லாத்தையும் பற்றியும் தெரிஞ்சு வச்சுக்கனும்.
இரண்டு கரைக்கு இடையில் உள்ள தூரம் Spanன்னு சொல்லுவாங்க… இத இணைக்கிற கட்டுமான அமைப்பு பாலம்னு சொல்றோம்.
ஓடை, ஆறு, சாலை, இரயில்வே, பள்ளத்தாக்கு, பாதசாரிகள் பயன்பாடுன்னு கட்டப்படுற கட்டுமானம்.
இத மூனு வகையா பிரிக்கலாம்
Span 6மீ க்குள்ள இருந்தா Culvert,
6 இருந்து 60m க்குள்ள இருந்தா அது Minor bridge,
60மீ. மேல இருந்துச்சுன்னா அது major bridge இல்லைன்னா long span bridgeன்னு சொல்லுவாங்க….
பொதுவா நாம கட்டுற இந்த பாலத்துக்கு சராசரியா 50 வருஷம் தாங்கனும்னு கணக்கு. இந்த பாலங்களை Slab, Beam, Truss, Arch, Cable stayed or suspension bridges ன்னு வகை வகையாக கட்டலாம். எல்லாமே இடமும் தேவையும் கருதி செய்யனும். ஓகேவா * சிவதி* 7871336611