Showing posts with label ஊரக வளர்ச்சி. Show all posts
Showing posts with label ஊரக வளர்ச்சி. Show all posts

Monday, November 14, 2016

ஊரக வளர்ச்சித் துறை- வினா எண் 36

நானே கேள்வி # நானே பதில் # சிவதி # வளர்ச்சித்துறை  - -36

கேள்வி -   ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம்?

சிவதி பதில் – சில ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்திற்கு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் ‘’தாம் தூம் ‘’ என்று செலவு செய்கின்றனர். ஆனால் அரசு முதலில் கிராம சபைக்கூட்டத்திற்கு 500 ரூபாய் மட்டுமே அனுமதித்தது. அரசாணை எண். 160 நாள் 30.9.2008 க்கு பிறகு ரூ.1000/- ஆக உயர்த்தப்பட்டது. எப்படி பட்ட கிராம சபைக்கான செலவினத்தொகை 1000க்குள்ளாகவே உரிய செலவு சீட்டுடன் இருக்க வேண்டும்.

          எனவே கிராம சபை கூட்டத்திற்கு 5000/- நோட்டீஸ் செலவினம்,  சாமினா பந்தல் பத்தாயிரம் என கணக்கு எழுதி வைத்திருந்தால் உரிய voucher இருக்கிறது என்பதற்காக அச்செலவினத்தை அனுமதிக்க முடியாது என்பதை ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள் அறிய வேண்டும் # சிவதி.

Sunday, November 6, 2016

வளர்ச்சித்துறை /  - வினா எண் 28

சிவதி: நானே கேள்வி # நானே பதில் # சிவதி # வளர்ச்சித்துறை /  - வினா எண் 28

கேள்வி - அய்யா தான் ஒரு ஊர் நல அலுவலர். ஒரு கட்டிடப்பணியின் தற்போது நிலையினை கவனிக்க பணிக்கப் பட்டேன். தற்போது அங்கே கட்டிடத்தின் பூச்சு வேலைப்பணி நடை பெற்று வருகிறது. நான் என்ன என்ன  கவனிக்க வேண்டும்?

பதில் - பூச்சுவேலை எனப்படும் plastering பணி கிட்டத்தட்ட கட்டப்பணியின் இறுதி கட்ட நிலை.

கட்டிடத்தின் வெளிப்புற வெப்பம் மற்றும் ஈரத்தன்மையில் இருந்து காப்பாற்றுவது பூச்சு வேலைதான்.

பின்வரும் நடைமுறைகள் பின்பற்றுகிறார்களா என களப்பணியில் உறுதி செய்யுங்கள்

பூச்சு வேலைக்கு முன்பு brick wallஐ நீரால் நன்கு நனைத்திட வேண்டும்.

plastering work சுவற்றின்  மேலிருந்து கீழாக செய்வதே முறையானதாக இருக்கும்.

பூச்சுவேலை முடிக்கப்பட்ட பகுதியை  10 முதல் 12 நாட்கள் தண்ணீரில் நனைக்க வேண்டும்.

சுவற்றிற்கு சிமெண்ட் மணல் கலவை 1;5 என 12 முதல் 15 mmம்

roofன் அடிப்புறம் எனில் 1;3 என 10 mm 12mm கனத்திற்கு பூசவேண்டும்.

இதயெல்லாம் கூட நாம தெரிஞ்சுக்கனம்  RWO Sir...

# சிவதி. TNRDOA 7871336611

Thursday, November 3, 2016

#நானே கேள்வி # நானே பதில் # சிவதி# வளர்ச்சித்துறை - - வினா எண் 21

#நானே கேள்வி # நானே பதில் # சிவதி# வளர்ச்சித்துறை - - வினா எண் 21 கேள்வி - Contractors க்குள்ள சின்ன contractor பெரிய Contractorனு வித்தியாசம் இருக்கிறதா? பதில் - பொதுவா ஒப்பந்ததாரர்களை ஐந்து வகையா பிரிக்கிறோம். 6 லட்சத்துக்குள்ள வேலை செய்ய தகுதியானவர் Class 5 contractor 15 லட்சம் வரை class 4 30 லட்சம் வரை class 3 75 லட்சம் வரை class 2 75 லட்சத்துக்கு மேல் வேலை செய்ய தகுதியான பெரிய contractorஅ. class 1 னு சொல்றோம். இந்த வகைப்பாடு பொருத்த வரைக்கும் நாம நெடுஞ்சாலை மற்றும் PWD guidelines எடுத்துக்கறோம். நெடுஞ்சாலைத்துறை அரசாணை எண் 251 நாள் 12.10.2007 # சிவதி#

Monday, October 31, 2016

ஊரக வளர்ச்சி /  -  வினா எண் 19

சிவதி: *நானே கேள்வி நானே பதில்* சிவதி* ஊரக வளர்ச்சி /  -  வினா எண் 19
கேள்வி – இது  மழைக்காலம் …… சாலையில் உள்ள பாலங்களை (Bridges) பற்றி தெரிஞ்சுக்கலாமா?....
பதில் – நிச்சயமா….. வளர்ச்சித்துறையில இருக்கிற நாம எல்லாத்தையும் பற்றியும் தெரிஞ்சு வச்சுக்கனும்.
இரண்டு கரைக்கு இடையில் உள்ள தூரம் Spanன்னு சொல்லுவாங்க… இத  இணைக்கிற கட்டுமான அமைப்பு பாலம்னு சொல்றோம்.
ஓடை, ஆறு, சாலை, இரயில்வே, பள்ளத்தாக்கு, பாதசாரிகள் பயன்பாடுன்னு கட்டப்படுற கட்டுமானம்.
இத மூனு வகையா பிரிக்கலாம்
Span 6மீ க்குள்ள இருந்தா Culvert,
6 இருந்து 60m க்குள்ள இருந்தா அது Minor bridge,
60மீ. மேல இருந்துச்சுன்னா அது major bridge இல்லைன்னா long span bridgeன்னு சொல்லுவாங்க….
பொதுவா நாம கட்டுற இந்த பாலத்துக்கு சராசரியா 50 வருஷம் தாங்கனும்னு கணக்கு. இந்த பாலங்களை  Slab, Beam, Truss, Arch, Cable stayed or suspension bridges ன்னு வகை வகையாக கட்டலாம். எல்லாமே இடமும் தேவையும் கருதி செய்யனும். ஓகேவா * சிவதி* 7871336611

Monday, October 24, 2016

நானே கேள்வி # நானே பதில் - வினா எண் 14

சிவதி: நானே கேள்வி * நானே பதில் * சிவதி* ஊரக வளர்ச்சி /  - 14
கேள்வி - ஊராட்சி மன்ற தலைவர், மதிப்பீடு இல்லாமல், அளவு புத்தகம் இல்லாமல் ஒரு பொதுப்பணியினை (Civil Work) செய்வதற்கு அதிகாரம் உள்ளதா?
பதில் - உள்ளது. ஆனால் சில நிபந்தனையோட இத செய்யனும்னு விதி சொல்லுது. அதாவது வேலையின் மதிப்பு ரூ. 2000க்கு மேற்பட கூடாது. அப்படி செய்யற வேலையோட மொத்த மதிப்பு  ரூ. 5000க்கு அதிகமா போகாம  இருக்கனும்.  எஸ்டிமேட், எம்புக் இல்லாம ஊராட்சி மன்ற தலைவர் தகுந்த  காரணத்தோட பணியினை மேற்கொள்ள விதிமுறைல இடம்  இருக்கு * சிவதி 7871336611

நானே கேள்வி நானே பதில் - வினா எண் 2

*நானே கேள்வி * நானே பதில் # சிவதி. TNRDOA/ ஊரக வளர்ச்சி 1/  வினா எண். 2

கேள்வி - உள்ளாட்சியில் பகிரங்க ஏலம் விடும்போது ஏல நோட்டீசில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

 சிவதி பதில் - பொதுவாக ஊராட்சிகளில் ஏலம் விடுவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை.

ஆனால் உரிய நடைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. முடிந்த வரையில் இதனை மூன்று கேள்வி பதில்களில் நிறைவு செய்கிறேன். மொதல்ல பத்து point note பன்னுங்கப்பா….

1. முதலில் ஏலம் விடும் உத்தேசித்த பத்து தினங்களுக்குள் நோட்டீஸ் அனுப்பனும். அதுக்காக 20 நாட்கள் முன்னதாகவே அறிவிப்பு செய்யக்கூடாது.

2. அது கிராம ஊராட்சியோ அல்லது வட்டார ஊராட்சியோ தொடர்பான ஊராட்சியின் மன்ற ஒப்புதல் பெறனும்… சரியா…

3. ஏலம் நடக்கும் இடம், நேரம், தேதி ஆகியவையும் அது யாரால் நடத்தப்பெறும் என்ற விவரமும் நோட்டீசில் இருக்கனுமுங்க…

4. நோட்டீசில் எந்த கால கெடுவிற்குள் இந்த ஏல ஒப்பந்தம் நடைபெறும் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.

5. பாதுகாப்பு வைப்புத் தொகை எவ்வளவு என்பது அந்த நோட்டீசில் இருக்கனும்ங்க…

6. ஒருத்தர் ஏலம் எடுக்கிறார்னு வச்சுக்குவோம்… அவர் எவ்வளவு தொகை செலுத்தனும் அத எப்புடி செலுத்தனும்னு தெளிவா நோட்டீசுல தெரிவிக்கனும்.

7.   ஏலத்தில் கலந்து கொள்வோர் கடந்த முறை நடந்த ஏலத்தில் அவர்களின் செயல்முறைகளை பரிசீலித்து அவர் பெயர் black listல் இருக்கிறாரா என்பதையும் பணம் ஏதும் நிலுவை வைத்துள்ளாரா என்பதை கண்காணித்து அவரை ஏலத்தில் பங்கு கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.

8. ஏலத்தின் நேர்வுக்கு ஏற்றார் போல சொத்து சான்று கோரலாம்.

9. ஏலம் எடுத்தவுடன் விண்ணப்பதாரர் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை ஏல நோட்டீசில் தெளிவா குறிப்பிடனும்.

10. ஏலத்திற்கான பட்டியல் தொகை (schedule) தொகை எவ்வளவுன்னு தெரிவிக்கனும்.  ஏலம் எடுத்தவர் தொகையை எத்தனை தவனையா செலுத்தலாம்.. இல்ல ஒரே தவனையா செலுத்தலாமான்னு தெரிவிக்கனும். Scheduleக்கு vat உண்டு…. மறந்துடாதீங்கண்ணே அப்புறம் வருத்தப்படூவீக…..

மேலும் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றியும் இந்த ஏலம் ரத்து செய்ய ஏலம் நடத்தும் செயல் அலுவலருக்கு உரிமை உண்டுன்னு  ஒரு அறிவிப்பு அதுல இடம் பெறனும்.

இன்னும் பல விவரம் இருக்கு அடுத்த கேள்வியில அது வரும்…. – சிவதி. TNRDOA 7871336611

நானே கேள்வி # நானே பதில் # வினா எண் 6

ஏலம் 2ம் பகுதி.  # நானே கேள்வி # நானே பதில் # சிவதி #  ஊரக வளர்ச்சி /  - 2 வினா எண் 6

கேள்வி - ஊராட்சிகளில் எப்படி ஏலம் நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்?

சிவதி பதில் – முதலில் ஊராட்சி என்பது பொதுப்பெயர் என்பதை அறிக.

அது வட்டாரமாகட்டும் கிராமம் ஆகட்டும் இல்லைன்னா மாவட்டம் ஆகட்டும் சட்டப்படி எல்லாம் ஊராட்சிதான்.

1. ஊராட்சியில் ஏல அறிவிப்பு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்

2. ஒரு வேலை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலம் எனில்  அது எந்த ஊராட்சி ஊராட்சி பகுதியை சார்ந்ததோ அந்த கிராம ஊராட்சியிலும் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

3. மக்கள் கூடும் இடம் சந்தை, வழிபாட்டு தளம், சாவடி என விளம்பரம் செய்யலாம்.

4. மூன்று மணி நேரம் முன்னதாக தண்டோரா போடவேண்டும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்டோரா போடும் மூறை வழங்கொழிந்து விட்டதால் ஆட்டோவில் மைக் மூலம் அறிவிக்கலாம்.

5. ஏலம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் அது தொடர்பான கோப்பில் கரும சிரத்தையுடன் தொகுக்க வேண்டும்.

6. ஏலம் விடக்கூடிய பொருள் தொடர்பான முகவர்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளம்பர அறிக்கை சேர்த்தல் வேண்டும்.

7. ஏலத்தொகை ரொக்கமாகவா அல்லது வங்கிவரைவா அல்லது பிற வகையிலா என்பது தெளிவாக நோட்டீசில் குறிப்பிட வேண்டும்

8. ஏலம் நடைபெறவிருக்கும் நாளில் இருந்து 7 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் விளம்பரம் அரசிதழில் பிரசுரிக்க வேண்டும்.

9. ஏலத்தின் மொத்த தொகை 10 ஆயிரத்திற்குள் எனில் மாவட்ட அரசிதழிலும்

10க்கு மேல் எனில் நாளிதழிலும் விளம்பரம் செய்ய வேண்டும்.

10. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எல்லோராலும் இந்த விவரங்கள் கேட்க முடியும் என்பதால் நிச்சயமாக ஒளிவு மறைவற்ற தன்மை ஏல விளம்பர அறிவிப்பில் தேவை…..

அடுத்த கேள்வி பதிலில் ஏலம் தொடர்பான இதர முக்கிய விவரங்கள் முடித்துக்கொள்கிறேன். – சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம் 7871336611

நானே கேள்வி நானே பதில் - சிவதி - வினா எண் 10

ஏலம் பகுதி 3…..

#. நானே கேள்வி # நானே பதில் # சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம். / ஊரக வளர்ச்சி /  -. வினா எண் 10

கேள்வி – பகிரங்க ஏலம் நட்டத்தப்பெற என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் ?

சிவதி பதில் –

1. கூடுமான வரையில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற அலுவலக வளாகத்திற்குள்தான் ஏலம் நடத்த வேண்டும்

 2.  ஏலம் விடக்கூடிய பொருள் எளிதில் இடம்பெயர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே அவ்விடத்திற்கு அருகாமையில் ஏலம் விடும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்

3.  ஏல நடைமுறை ஒளிவு மறைவு இல்லாத பகிரங்க ஏலமாக அமையவேண்டும்

 4. ஏலம் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த மன்ற குழுவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினருக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்

5. ஏலம் விடும் அலுவலர் ஏலம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே அவ்விடத்தில் இருக்க வேண்டும்

6.  பலவிதமான பொருட்கள் ஏலம் விடுவதாக இருந்தால் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்

 7.  முதலில் ஏலம் விடும் தொகையின் சந்தை மதிப்பின் அடிப்படையில் தொகையினை நிர்ணயித்து பின்னர் ஏலம் விடும்போது அத்தொகையில் இருந்து படிப்படியாக உயர்த்திக்கொண்டே போகும் நடைமுறையின்படி ஏலம் விடப்பட வேண்டும்

8.  வைப்புத்தொகை மற்றும் ஏலத்தொகை பெற்றுக்கொண்டே அடுத்த பொருள் ஏலம் விடவேண்டும். வைப்புத்தொகை செலுத்தாத ஏலம்/குத்தகைதாரரை ஏலத்திற்கு அனுமதிக்கூடாது

9.  ஏல நடைமுறை நாளிலேயே ஏலம் கிடைக்காத நபருக்கு உரிய வைப்புத்தொகையினை திரும்பத்தருதல் வேண்டும். எந்த பண வர்த்தணைக்கும் அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும்

10.   ஏலத்திற்கென வசூல் செய்த தொகையினை ஏல தினத்தன்றோ அல்லது அன்றைய மறு வேலைநாளிலோ உடனடியாக கருவூலத்தில் செலுத்திடல் வேண்டும்.

மேற்படி நடைமுறைகள் ஏலம் மற்றும் குத்தகைகளுக்கு பொருந்தும். மேலும் விவங்களை பெற நினைப்பவர்கள் அரசு ஆணை எண் (G.O. (Ms) No. 277, Rural Development (C-4) Department, Dated 22nd  November, 2001) ல் அறியலாம் (3வது பகுதி முற்றும்) – சிவதி. TNRDOA, 7871336611.

நானே கேள்வி நானே பதில் - வினா எண் 13

சிவதி: நானே கேள்வி * நானே பதில் * சிவ.தினகரன்* வளர்ச்சித்துறை -  -  வினா எண் 13


கேள்வி – வங்கி காசோலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கையெப்பம் இருந்து, கணக்கில் பணம் இருந்தால் வங்கி சட்டப்படி தொகை விடுவிக்க வேண்டும் அப்படித்தானே?

பதில் – வங்கி சட்டப்படி அப்படித்தான். ஆனால் ஊராட்சிகளில் கணக்கு எண் 1ல் இது பொருந்தினாலும் ஊராட்சி கணக்கு எண். 2ல் இது செல்லுபடியாகாது.  ஊராட்சி மன்ற தலைவர்கள் தன்னிச்சையாக EBக்கு பணம் செலுத்தாமல் பெரும் தொகை கையாடல் செய்யும்  மோசடிகள் கண்டறியப்பட்டன.

இதன் விளைவாக தமிழக அரசு 17.8.2007ல் அரசாணை (நிலை) எண். 146ல் காசோலைகளில்  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செயல்முறைகள் வாயிலாக விடுவிப்பு ஆணைகள் இணைத்தால் மட்டுமே தொகை கொடுக்கப்பட வேண்டும்' என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் withdrawal slip மூலம் தொகை எடுக்க்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள் காசோலைகளில் இந்த முத்திரை உள்ளதா என கண்காணிக்க வேண்டும் # சிவ. தினகரன