Wednesday, August 9, 2023

மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி தொடர்பான விதி முறைகள் மற்றும் அரசாணைகள்.

 

வ.எண்.

அரசாணை / சுற்றறிக்கை எண் நாள்.

விவரம்

1.       1

G.0.(Ms).No.154, Housing and Urban Development (UD4(3))

Department, dated 13.10.2020.

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் குடியிருப்பு பகுதிகளுக்கு 10 ஆயிரம் ச.அடியும் வணிக பகுதிகளுக்கு 2 ஆயிரம் சதுர அடியும் மட்டும் அடங்கும் என்பதற்கான அரசாணை.

 

2.     2

Housing and Urban Development [UD4(1)] Department

G.O.(Ms).No.265 Dated: 21.12.2022

கட்டிட அனுமதிக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்ட இடம் குறித்தான தெளிவுரைகள்.

 

10000 ச‍அ. அதிகாரம் அளிக்கப்பட்ட இடம், எவ்வளவு கட்டிட்ட அளவு கட்டுகிறோம் என்பதற்கு மட்டுமே பொருந்தும். FSI area 10 ஆயிரம் ச. அடிக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Stilt +3 கட்டும் போது, கீழே உள்ள காலி இடத்தினை கணக்கில் கொள்ளக் கூடாது என்பதை அறிய வேண்டும்.

3.     3

Housing and Urban Development [UD4(3)] Department

G.O.(Ms).No.78 Dated:04.05.2017

 

அங்கிகார மற்ற மனைப்பிரிவு வரன்முறை படுத்துதல், வ.வ.அ. (கி.ஊ) அவர்களுக்கு அதிகரம் அளிக்கப்பட்ட அரசாணை.

 

4.     4

G.O.(Ms).No.172 _ Dated:13.1O.2O17

 

 

அங்கிராமற்ற மனைப்பிரிவு வரன் முறைப்படுத்துதல்


சாலைகள்
, மற்றும் திறந்த வெளியிடங்கள் உள்ளாட்சிக்கு ஒப்படைப்பட்டபட்டதாக கருதும் அரசாணை. வரன்முறை அரசாணை வெளியட்ட பிறகு வந்த திருத்தங்கள் கொண்ட அரசாணை.

5.     5

Housing and Urban Development [UD4(3)] Department

G.O.(Ms).No.21, dated 5.2.19

 

 

வரன்முறைபடுத்துதல் கட்டணங்கள் திருத்தி விகிதம்

 

அங்கிகாரமற்ற மனைப்பிரிவு, வரன்முறைபடுத்தும் கட்டணம் மூன்று முறை திருத்தி அமைக்கப்பட்டது. அந்த விவரங்கள் அடங்கியுள்ள அரசாணை.

6.     6

Housing and Urban Development [UD4(3)] Department

murhiz (ãiy) v©.16 ehŸ: 25.01.2021.

மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டம் 28.2.2021 வரை கால நீட்டிப்பு வழங்கிய அரசாணை.

 

7.      7

HOUSING AND URBAN DEVELOPMENT (UD4(1)) DEPARTMENTUD4(1)) DEPARTME

G.O.(Ms).No.23 Dated: 24.01.2012

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் திறந்த வெளியிடம் ஒப்படைப்பது குறித்தான அரசாணை

8.     8

Office of the Director of Town and Country Planrdng,
Circular Roc.No.436712019-B,{2 Dated:05.02.2020.

மனைப்பிரிவு அனுமதி உள்ளாட்சிக்கு திறந்த வெளியிடம் ஒப்படைக்கும் போது கவனிக்க வேண்டிய கணக்கீடு குறித்தான நகர்ப்புற ஊரமைப்புத்துறையின் சுற்றறிக்கை

 

9.     

 

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டிட அனுமதி தொடர்பாக அனுப்பிய தெளிவுரைகள்

 

 

Tuesday, November 15, 2016

வளர்ச்சித்துறை  - வினா எண் 38

# நானே கேள்வி நானே பதில் # சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம்# வளர்ச்சித்துறை  - 38

கேள்வி – வணக்கம். நான் ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறேன். பொதுப்பணிகள் (Civil works) செய்யும் போது மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என சொல்கிறார்களே….. ஒரு மதிப்பீடு அறிக்கையில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?

சிவதி பதில் –எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்க இராமய்யா….. என்ற பாடலைப்போல  ஒரு தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்ட மதிப்பீட்டில் கீழ்கண்டுள்ள  “எட்டு” விவரங்கள் உள்ளனவா என கவனியுங்கள்….

1.     Check slip

2.     Detailed Specification Report

3.     Abstract Estimate (மதிப்பீட்டின் சுருக்கம்)

4.     விவரமான மதிப்பீடு (detailed Estimate)

5.     Key map

6.      Lead Statement

7.     Data

8.     கட்டிடத்தின் வரைபடம், முகப்பு தோற்றம், ஆகியன அடங்கிய விவரப்படம்  ஆகியவை இருக்க வேண்டும்.

ஒவ்வொன்றும் என்ன என்ன விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்பதை பின்னர் வரும் நாகே# நாப – ல் பார்க்கலாம் # சிவதி.  7871336611

Monday, November 14, 2016

அடிப்படை விதிகள் - வினா எண் 37

நானே கேள்வி # நானே பதில் #  அடிப்படை விதிகள் - வினா எண் 37

கேள்வி - கருணை அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதார் எவ்வளவு படித்திருந்தாலும் அவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம்தான் வழங்கப்படுமா?

பதில் - அலுவலக உதவியாளரோ, ஊராட்சி செயலரோ அல்லது  இரவுக்காவலரோ இறந்தால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு இளநிலை கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடம் வேண்டும் என்று போராடி பெற்ற அரசு ஊழியர் சங்கங்களுக்கும் ஊ. வளர்ச்சித்துறை அ. சங்கத்திற்கும்  முதலில் நன்றியை சொல்லிவிட்டு பதிலினை தொடங்குவது முறையாக இருக்கும்.

கருணை அடிப்படையில் விணப்பபிப்பவர் பொறியில், மருத்துவம், வேளாண்மை, தொழில் நுட்பம் என முடித்தவராக இருப்பாராயின் அதாவாது BE, MBBS, B.Sc.( Agri) …என முடித்திருப்பாராயின் அவரது படிப்புக்கு தகுதியான பணியிடத்தை வழங்க வழி வகை உள்ளது.

ஒருவேளை அந்த துறையில் அவ்வாறு பணியிடம் இல்லை எனில் மாற்றுத்துறைக்கும் பரிந்துரைத்து அவரது படிப்புக்கான பணியிடத்தை பெறலாம்.

உண்மையாகவ சொல்றீங்க… இது சாத்தியமா என்றால். ஆம் சாத்தியம்தான். ஏற்கனவே அரசு G.O.(3D) No. 46, PWD Dt. 7.9.2001 ன் படி கருணை அடிப்படையில் விண்ணப்பித்தவருக்கு உதவிப்பொறியாளர் வழங்கி உத்திரவிட்டுள்ளது. இது பொதுப்பணித்துறையில நடந்தது.

பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இப்போது ஒரு புள்ளி வைத்துள்ளது. 16.9.2006ல் கடித எண் 126/Q1M2006 ன் படி இதுபோன்ற நடைமுறைகள் C மற்றும் D க்கு மட்டுமே பொருந்தும்  என்று கடிதம் அனுப்பியுள்ளது.


அதிகாரிகளின் ஒற்றுமை உலக முதலாளிகளின் ஒற்றுமையைவிட தலைசிறந்தது என்பதை நாம் உணர முடிகிறது. # சிவதி, 7871336611, TNRDOA

ஊரக வளர்ச்சித் துறை- வினா எண் 36

நானே கேள்வி # நானே பதில் # சிவதி # வளர்ச்சித்துறை  - -36

கேள்வி -   ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம்?

சிவதி பதில் – சில ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்திற்கு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் ‘’தாம் தூம் ‘’ என்று செலவு செய்கின்றனர். ஆனால் அரசு முதலில் கிராம சபைக்கூட்டத்திற்கு 500 ரூபாய் மட்டுமே அனுமதித்தது. அரசாணை எண். 160 நாள் 30.9.2008 க்கு பிறகு ரூ.1000/- ஆக உயர்த்தப்பட்டது. எப்படி பட்ட கிராம சபைக்கான செலவினத்தொகை 1000க்குள்ளாகவே உரிய செலவு சீட்டுடன் இருக்க வேண்டும்.

          எனவே கிராம சபை கூட்டத்திற்கு 5000/- நோட்டீஸ் செலவினம்,  சாமினா பந்தல் பத்தாயிரம் என கணக்கு எழுதி வைத்திருந்தால் உரிய voucher இருக்கிறது என்பதற்காக அச்செலவினத்தை அனுமதிக்க முடியாது என்பதை ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள் அறிய வேண்டும் # சிவதி.

Tuesday, November 8, 2016

அலுவலக நடைமுறை # வினா எண் 31

நானே கேள்வி நானே பதில் # சிவதி.- அடிப்படை விதி - அலுவலக நடைமுறை - 31

கேள்வி  - அரசு அலுவலகத்தில் முடிவுற்ற கோப்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

சிவதி பதில் – முடிவுற்ற கோப்புகளை பதிவறைக்கு அடுக்கி வைக்கிறோம் அல்லவா. அந்த கோப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று வைக்க்கூடாது. ஒரு லைப்பர ரியில் புத்தகங்களை அடுக்கி வைப்பதை பார்த்திருக்கீங்க இல்லையா…. அதவாவது செங்குத்தாக ஒன்னு பக்கத்துல ஒன்னு சாய்வாக அடுப்பட்டிருக்குமே… அதுபோல அழகாக நூலகங்களை பின்பற்றி அடுக்கி வைக்கனும். 

ஒன்று மேல ஒன்று என  LIC Building  மாதிரி அடுக்க்கூடாதுங்க. மாவட்ட நிர்வாக நடைமுறை நூல் 103 பத்திய படிச்சுட்டு மீத விவரத்தை தெரிந்து கொள்ளனும். # சிவதி  7871336611

Monday, November 7, 2016

கட்டிட அனுமதி - வினா எண் 30

நானே கேள்வி # நானே பதில் # சிவதி- கட்டிட அனுமதி - வினா எண் 30

கேள்வி - கட்டிட அனுமதி குறித்து ஏதேனும் சிறப்பு செய்தி உண்டா?

பதில் -  உண்டு, தொழில் முதலீடு மற்றும் கட்டிடவியலார் நூற்றாண்டு விழாக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட நடுவண் அரசின்  நகர்புற வளர்ச்சி  அமைச்சர்  வெங்கய்யா ஒரு செய்தியினை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் பெருநகர திட்டக்குழுமம் மற்றும் நகர் புற ஊரமைப்பு இயக்ககத்திடம் கட்டிட அனுமதி பெறும் பொருட்டு   விண்ணபித்து அனுமதி பெறும் நடைமுறை மிகவும் கால தாமதமாகிறது என்றும் இதனால் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தொழில் தொடங்க முடியவில்லை என்பால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி வெகுவாக பாதிகபட்டுள்ளது எனக்கருதி நடுவண் அமைச்சர்களுடன் பேசி அக்கூட்டத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அமைச்சரவை கூட்டத்தில் முடிவினை பிரதமரின் ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதன் படி கட்டிட அனுமதி அளிக்கும் அதிகாரம் ஊள்ளாட்சிக்கு அளிக்கவும் விண்ணப்பத்தினை 60 நாட்களுக்குள் பரிசீலித்து உரிய அனுமதி / பதில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை எனில் அனுமதி வழங்கபட்டதாக விண்ணப்பதாரர் கருதிக்கொள்ளலாம்.

வனூர்தி நிலையம் அமையுமிடத்திலிருந்து 20 கி.மீ. பகுதிகளுக்கு உரிய நிலைய விரிவக்கா குழுமத்திடம் தடையில்லா சான்று பெற்றும் இந்திய தொல்லியல் துறை வரையறை செய்யப்பட்ட இடத்தில் 100 முதல் 300மீ சுற்றுவட்டப்பாதைக்குள் கட்டப்படும் கட்டமானமாயின் அரசு நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கும் குழுமத்திடம் தடையில்லாச்சான்று பெற்று அனுமதி வழங்க ஆணை வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆணைகள் வெளியிடும்போதுதான் முழு நிலவரம் என்ன நமக்காம பொறுப்புகள் என்ன என்பது நமக்கு தெரியவரும். (ஆதாரம் Times Of India 6.11.2016 நாளிதழ் செய்தி)

எனவே மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி குறித்து அதிகமாக விதிமுறைகளை படியுங்கள் தோழர்களே...

்# சிவதி, 7871336611, TNRDOA

Sunday, November 6, 2016

கட்டிட அனுமதி # வினா எண் 29

சிவதி # நானே கேள்வி நானே பதில் # கட்டிட அனுமதி # வினா எண் 29

கேள்வி - வரைபட அனுமதி வழங்கப்பட்ட கட்டிட ஆணைக்கு செல்லுபடி காலமென்ன?

பதில் - வரைபட அனுமதி பொதுவாக ஓர் ஆண்டுக்காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அனுமதி வாங்கியவர் அக்கால கெடுவிற்குள் கட்டுமானத்தை முடித்திட வேண்டும். அவ்வாறு முடிக்கவில்லை எனில் அவ்வனுமதி செல்லத்தக்கதாக இருக்காது.

சில பேர் அனுமதி வாங்கி வைத்துக்கொண்டு பல நாள் பொருத்து கட்ட ஆரம்பித்தாலோ அல்லது வங்கி கடனை எதிர்நோக்கி கட்டாமல் இருந்தாலோ அக்கால கெடுவிற்குள் தொடங்க முடியவில்லை என்றாலோ அவ்வனுமதி காலாவதியானதாக பொருள்.

மேலும் ஊராட்சி மன்றத்தாலோ அல்லது ஒன்றிய நிர்வாகத்தாலோ கால கெடு நீட்டிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை.

மனுதாரர் புதிதாகத்தான் தமது விண்ணப்பத்தினை வழங்கி மீண்டும் கட்டிட அனுமதிக்கான உரிமத்தொகையினை செலுத்தி அனுமதி பெறவேண்டும்.

இந்நிகழ்வில் Renewal மற்றும்  Revalidate எல்லாம் செல்லுபடியாகாது என்பதை வளர்ச்சித்துறையினை சார்ந்த நாம் அறியவேண்டும். *தமிழ்நாடு கட்டிட விதிகள் சட்டம் 1997 விதி எண் 30* # சிவதி 7871336611  TNRDOA