Monday, October 24, 2016

நானே கேள்வி நானே பதில் - சிவதி - வினா எண் 10

ஏலம் பகுதி 3…..

#. நானே கேள்வி # நானே பதில் # சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம். / ஊரக வளர்ச்சி /  -. வினா எண் 10

கேள்வி – பகிரங்க ஏலம் நட்டத்தப்பெற என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் ?

சிவதி பதில் –

1. கூடுமான வரையில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற அலுவலக வளாகத்திற்குள்தான் ஏலம் நடத்த வேண்டும்

 2.  ஏலம் விடக்கூடிய பொருள் எளிதில் இடம்பெயர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே அவ்விடத்திற்கு அருகாமையில் ஏலம் விடும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்

3.  ஏல நடைமுறை ஒளிவு மறைவு இல்லாத பகிரங்க ஏலமாக அமையவேண்டும்

 4. ஏலம் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த மன்ற குழுவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினருக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்

5. ஏலம் விடும் அலுவலர் ஏலம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே அவ்விடத்தில் இருக்க வேண்டும்

6.  பலவிதமான பொருட்கள் ஏலம் விடுவதாக இருந்தால் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்

 7.  முதலில் ஏலம் விடும் தொகையின் சந்தை மதிப்பின் அடிப்படையில் தொகையினை நிர்ணயித்து பின்னர் ஏலம் விடும்போது அத்தொகையில் இருந்து படிப்படியாக உயர்த்திக்கொண்டே போகும் நடைமுறையின்படி ஏலம் விடப்பட வேண்டும்

8.  வைப்புத்தொகை மற்றும் ஏலத்தொகை பெற்றுக்கொண்டே அடுத்த பொருள் ஏலம் விடவேண்டும். வைப்புத்தொகை செலுத்தாத ஏலம்/குத்தகைதாரரை ஏலத்திற்கு அனுமதிக்கூடாது

9.  ஏல நடைமுறை நாளிலேயே ஏலம் கிடைக்காத நபருக்கு உரிய வைப்புத்தொகையினை திரும்பத்தருதல் வேண்டும். எந்த பண வர்த்தணைக்கும் அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும்

10.   ஏலத்திற்கென வசூல் செய்த தொகையினை ஏல தினத்தன்றோ அல்லது அன்றைய மறு வேலைநாளிலோ உடனடியாக கருவூலத்தில் செலுத்திடல் வேண்டும்.

மேற்படி நடைமுறைகள் ஏலம் மற்றும் குத்தகைகளுக்கு பொருந்தும். மேலும் விவங்களை பெற நினைப்பவர்கள் அரசு ஆணை எண் (G.O. (Ms) No. 277, Rural Development (C-4) Department, Dated 22nd  November, 2001) ல் அறியலாம் (3வது பகுதி முற்றும்) – சிவதி. TNRDOA, 7871336611.

No comments:

Post a Comment