Monday, October 24, 2016

நானே கேள்வி # நானே பதில் # வினா எண் 6

ஏலம் 2ம் பகுதி.  # நானே கேள்வி # நானே பதில் # சிவதி #  ஊரக வளர்ச்சி /  - 2 வினா எண் 6

கேள்வி - ஊராட்சிகளில் எப்படி ஏலம் நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்?

சிவதி பதில் – முதலில் ஊராட்சி என்பது பொதுப்பெயர் என்பதை அறிக.

அது வட்டாரமாகட்டும் கிராமம் ஆகட்டும் இல்லைன்னா மாவட்டம் ஆகட்டும் சட்டப்படி எல்லாம் ஊராட்சிதான்.

1. ஊராட்சியில் ஏல அறிவிப்பு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்

2. ஒரு வேலை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலம் எனில்  அது எந்த ஊராட்சி ஊராட்சி பகுதியை சார்ந்ததோ அந்த கிராம ஊராட்சியிலும் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

3. மக்கள் கூடும் இடம் சந்தை, வழிபாட்டு தளம், சாவடி என விளம்பரம் செய்யலாம்.

4. மூன்று மணி நேரம் முன்னதாக தண்டோரா போடவேண்டும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்டோரா போடும் மூறை வழங்கொழிந்து விட்டதால் ஆட்டோவில் மைக் மூலம் அறிவிக்கலாம்.

5. ஏலம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் அது தொடர்பான கோப்பில் கரும சிரத்தையுடன் தொகுக்க வேண்டும்.

6. ஏலம் விடக்கூடிய பொருள் தொடர்பான முகவர்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளம்பர அறிக்கை சேர்த்தல் வேண்டும்.

7. ஏலத்தொகை ரொக்கமாகவா அல்லது வங்கிவரைவா அல்லது பிற வகையிலா என்பது தெளிவாக நோட்டீசில் குறிப்பிட வேண்டும்

8. ஏலம் நடைபெறவிருக்கும் நாளில் இருந்து 7 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் விளம்பரம் அரசிதழில் பிரசுரிக்க வேண்டும்.

9. ஏலத்தின் மொத்த தொகை 10 ஆயிரத்திற்குள் எனில் மாவட்ட அரசிதழிலும்

10க்கு மேல் எனில் நாளிதழிலும் விளம்பரம் செய்ய வேண்டும்.

10. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எல்லோராலும் இந்த விவரங்கள் கேட்க முடியும் என்பதால் நிச்சயமாக ஒளிவு மறைவற்ற தன்மை ஏல விளம்பர அறிவிப்பில் தேவை…..

அடுத்த கேள்வி பதிலில் ஏலம் தொடர்பான இதர முக்கிய விவரங்கள் முடித்துக்கொள்கிறேன். – சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம் 7871336611

No comments:

Post a Comment