Sunday, November 6, 2016

வளர்ச்சித்துறை /  - வினா எண் 28

சிவதி: நானே கேள்வி # நானே பதில் # சிவதி # வளர்ச்சித்துறை /  - வினா எண் 28

கேள்வி - அய்யா தான் ஒரு ஊர் நல அலுவலர். ஒரு கட்டிடப்பணியின் தற்போது நிலையினை கவனிக்க பணிக்கப் பட்டேன். தற்போது அங்கே கட்டிடத்தின் பூச்சு வேலைப்பணி நடை பெற்று வருகிறது. நான் என்ன என்ன  கவனிக்க வேண்டும்?

பதில் - பூச்சுவேலை எனப்படும் plastering பணி கிட்டத்தட்ட கட்டப்பணியின் இறுதி கட்ட நிலை.

கட்டிடத்தின் வெளிப்புற வெப்பம் மற்றும் ஈரத்தன்மையில் இருந்து காப்பாற்றுவது பூச்சு வேலைதான்.

பின்வரும் நடைமுறைகள் பின்பற்றுகிறார்களா என களப்பணியில் உறுதி செய்யுங்கள்

பூச்சு வேலைக்கு முன்பு brick wallஐ நீரால் நன்கு நனைத்திட வேண்டும்.

plastering work சுவற்றின்  மேலிருந்து கீழாக செய்வதே முறையானதாக இருக்கும்.

பூச்சுவேலை முடிக்கப்பட்ட பகுதியை  10 முதல் 12 நாட்கள் தண்ணீரில் நனைக்க வேண்டும்.

சுவற்றிற்கு சிமெண்ட் மணல் கலவை 1;5 என 12 முதல் 15 mmம்

roofன் அடிப்புறம் எனில் 1;3 என 10 mm 12mm கனத்திற்கு பூசவேண்டும்.

இதயெல்லாம் கூட நாம தெரிஞ்சுக்கனம்  RWO Sir...

# சிவதி. TNRDOA 7871336611

Friday, November 4, 2016

#ஊரக வளர்ச்சித்துறை -   - வினா எண் 26

சிவதி: நானே கேள்வி #நானே பதில் # சிவதி #ஊரக வளர்ச்சித்துறை -   - வினா எண் 26

கேள்வி - குடிநீர் விநியோகத்திற்காக பயன்படும் குழாய்கள் ஒரே தன்மை உடையனவா?

பதில் - இல்லைங்க. பொதுவாக நாம பயன்படுத்துற குழாய்ங்க 11 வகையா இருக்குது.

1. Cast iron (CI)

2.Mild steel(MI)

3. Ductile iron (DC)

4. Galvanized iron (GI)

5. Reinforced cement concrete (RCC)

6. Pre stressed concrete (PSC)

7. Asbestosis cement pressure (AC)

8. Unplaticised polyvinyl chloride (UPVC)

9. Glass fibre reinforced plastic (GRP)

10. High density polyethylene (MDPE)

11. Medium density polyethylene (MDPE)

ஒவ்வொன்னுத்துக்கும் தனித்தனியான பௌதிக  குணங்கள் உண்டு. estimate costம் வித்தியாசப்படும்.

பைப்பை நேரில் பார்க்கும் போது என்ன குழாய் ....

எத்தனை எம்எம்னு  தெரிஞ்சுக்குங்க...

இந்த வேலையில லாபம் பாக்கிறவங்க.....

ஏமாத்துறவங்க..

நிறைய  உண்டுங்குறதால

நமக்கு ரொம்பவே கவனம் தேவை

மக்களுக்கு தண்ணி போய் சேரனும். நமக்கு தண்ணி காமிக்காம நம்மள காத்துகனும் # சிவதி#

அலுவலக நிர்வாகம் - வினா எண் 25

நானே கேள்வி # நானே பதில் # சிவதி/ அடிப்படை விதி / அலுவலக நிர்வாகம் - வினா எண் 25

கேள்வி – பகிர்மானப்பதிவேடு பற்றி விளக்குங்களேன்……

சிவதி பதில் – ம்…… இதை திறந்து பார்த்தால் சில எழுத்தர்களுக்கு ‘பகிர்’ பகிர்’னு மானம் போயுடும் அதனாலதான் பகிர்மானப்பதிவேடுன்னு பேரு வச்சாங்கலான்னு தெரியல…..
ஆனா… அலுவலக நடைமுறையில இந்த பதிவேட்டுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இது அரசு அலுவலகத்தின் முக்கிய பதிவேடுகளில் ஒன்று.  உண்மையாக பார்த்தால் எந்த ஒரு காகிதமும் கடிதமாக அறிக்கையாக மாறிய பிறகு அதற்கு அலுவலக ஆவண அந்தஸ்த்தை தருவது பகிரமானப் பதிவேடுதான்.

இந்த பதிவேடு சனவரி முதல் வேலை நாள் அன்று முதல் கடிதங்கள் எண்ணிட்டு பராமரிக்கும் பதிவேடு… பராமரிக்கும் முன் சில பக்கங்களை காலியாக விட்டு விட்டு எண்ணிட்டு தொடங்க வேண்டும்.
ஏப்ரல் முதல் வேலை நாளில் நிலுவைக் கோப்புகளின் விவரங்களை அந்த பக்கத்தில் எழுதி பிரிவு தலைவர் மற்றும் அலுவலக தலைவரிடம் ஒப்பம் பெற வேண்டும்.
நடப்பாண்டின் கடித எண்கள் ல் வரிசையாக இடப்படும் எண்கள் number mechine கருவியால் மட்டுமே இடப்பட வேண்டும்.  இந்த கடித எண்கள் தன் பதிவேட்டில் பதியப்பெற்று இணைப்பு எண்கள்  பகிரமானப்பதிவேட்டில் எழுத்தர்கள் குறிப்பிட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 1, 11,21 ஆகிய மூன்று நாட்கள் அலுவலக தலைவர்  இந்த இணைப்பு எண்கள் பதியப்பட்டதை ஆய்வு செயவது அவரது முக்கிய கடமையாகும்.

தான பத்திரம், காசோலை, பிற முக்கிய ஆவணங்கள் வரும் கடித விவரங்கள் பதிவேட்டின் 2வது  கலத்தில் குறித்து வைத்தல் வேண்டும்.
. நாள்தோறும் பெறப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் எண்ணிடப்ப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கையும் ஒத்திசைவு செய்து பிரிவுத்தலைவர் ஒப்பமிடவேண்டும்

மொத்த்த்தில் சுருக்கமாக சொன்னால் ஒரு அலுவலத்தின் உயர்நாடியே பகிர்மான பதிவேடுதான்.
பகிர்மானப் பதிவேடும் தன்பதிவேடும் மட்டுமே நாம் வேலை செய்தமைக்கான சான்றாக அதிகாரிகள் அளவிடுகின்றன. எழுத்தர்களே இதில் கவனம் செலுத்துங்கள் # சிவதி.  7871336611

Thursday, November 3, 2016

கட்டிட அனுமதி - வினா எண் 24

சிவதி: # நானே கேள்வி # நானே பதில் # சிவதி  # கட்டிட அனுமதி - வினா எண்  24
கேள்வி - புற்றீசல் போல மனைப்பிரிவுகள் பெருகி வருகின்றன? இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)மற்றும்.ம. துவ வ அ கடமை என்ன?
பதில் - மனைப்பிரிவு நகர் ஊரமைப்பு துறையால் அங்கிகரிக்கப் படுமானால் நிச்சயமாக அதில் 10% க்கு குறையாமல் OSR land ஊராட்சிக்கு தானபத்திரமாக வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு layoutக்கும் தானபத்திரமாக வழங்கப்பட்ட இடம் ஊராட்சியால் பராமரிக்கப் படவேண்டும்.
AD (Panchayat) மற்றும் Zonal Dy.Bdo  ஊராட்சி ஆய்விற்கு செல்லும் போது ஊராட்சி சொத்துப் பதிவேடு எண். 16ல் ஒப்படைக்கப்பட்ட நிலத்தின் சர்வே எண் மற்றும் விஸ்தீரணம் ஆகியவை குறிப்பிட்டுள்ளதை கண்காணிக்க வேண்டும்.
அந்த நிலத்திற்கான தானபத்திரத்தை ஆய்வுகுட்படுத்தி, அவை ஆக்கிரமிப்பு இன்றி வேலியிட்டு பராமரிக்கப் படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
பல ஊராட்சிகளில் இது சரியாக பராமரிக்கப்படுதில்லை என்ற குறைகள் உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில கணக்காயர் தணிக்கைத்தடையில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஊராட்சிக்கென புதிய கட்டிடங்கள் வரும் போது பொதுவாக நீர்நிலை ஓரமாக கட்டுவதை தவிர்த்து இது போன்று ஊராட்சி ஒப்படைப்பட்ட இடத்தை பயன்படுத்திக்கொள்வது சிறப்பானது.
நாம் நீர்நிலைகளையும் நமக்கு ஒப்படைபடைக்கப்பட்ட / தானமாக அளிக்கப்பட்ட நிலத்தினையும் ஒருங்கே பாதுகாத்த திருப்தி இருக்கும்
அது போல தனபத்திரமாக வழங்கப்பட்ட பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தின் முத்திரைத்தாள் ஆவணத்தை ஒவ்வொருமுறையும் ஊராட்சியில் சரிபாருங்கள்  # சிவதி. 7871336611

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 23

நானே கேள்வி # நானே பதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண் 23

கேள்வி - ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கிறது. அவர் இன்னும் நான்கு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார். அவருக்கு ஓய்வூதிய பிரேரணை விண்ணப்பத்தினை மாநிக கணக்காயருக்கு அனுப்பலாமா?

பதில் -  அனுப்ப முடியாது. ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகள் முடிவுற்றால்தான் நாம் பிரேரணையினை அனுப்ப முடியும். ஒரு வேலை நீங்கள் பிரேரணை அனுப்பிய பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால் உடனடியாக மாநில கணக்காயருக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆதாரம் Govt Lr. No. 69332/Pension/93-2 fnance Dt 16.8.93 # சிவதி, TNRDOA, 7871336611

நானே கேள்வி # நானே பதில் # சிவதி - தொழில்நுட்பம் - வினா எண் 22

நானே கேள்வி # நானே பதில் # சிவதி - தொழில்நுட்பம் - வினா எண் 22

கேள்வி – கணினியில் எக்செல் work sheetல் பணிபுரியும் போது அடுத்தடுத்த கலத்தில் பதிவிடும் விவரங்களை மொத்தமாக சேர்த்து ஒரு கலத்தில் கொண்டு வருவது எப்படி? Copy and past தனித்தனியே செய்யாமல் கொண்டு வர முடியுமா?

சிவதி பதில் – நிச்சயமாக முடியும். மைக்ரோசாப்ட் எக்செல் sheetல் முடியாத்து என்று எதுவும் இல்லை.  நீங்கள் கேட்பது இதுதானே… அதாவாது ஒரு  coloumn ல் வீட்டு  எண்ணும் மற்று ஒரு columnல் தெரு பெயரும் மற்றொரு கலத்தில் ஊர் பெயரும் உள்ளதென வைத்துக்கொள்வோம். இப்போது வீட்டு எண்ணுடன் தெருப்பெயர் மற்றும் ஊர் பெயர் தனியே ஒரு கலத்தில் வர வேண்டும்.

இதற்கு நீங்கள் ஒரு சாதாரண formula apply செய்தாலே போதுமானது. இந்த இடத்தில் cut and  paste போன்ற நடைமுறைகள் ஏதும் கை கொடுக்காது.

எந்த கலத்தில் மொத்த விரவங்கள் வேண்டுமோ அந்த இடத்தில் =CONCATENATE  என தட்டச்சு செய்து அடைப்பு குறிக்குள் மற்ற காலத்தின் மதிப்பீடுகளை cell no. இடுவதின் மூலம் அந்த கட்டத்தில் அனைத்தையும் பெற முடியும். எ.கா. =CONCATENATE(D8,C8,B8) என்பது போன்றவையாகும்.

முயற்சி செய்து பாருங்கள் பல இக்கட்டான விவரங்கள் மேல் அலுவலகத்திலிருந்து நம்மை கோரும் போது இது பயன்படும். கணினி கற்பது ஓர் அலாதியான அனுபவம் தோழர்களே. அதனை கசடற கற்போம்# சிவதி.7871336611

#நானே கேள்வி # நானே பதில் # சிவதி# வளர்ச்சித்துறை - - வினா எண் 21

#நானே கேள்வி # நானே பதில் # சிவதி# வளர்ச்சித்துறை - - வினா எண் 21 கேள்வி - Contractors க்குள்ள சின்ன contractor பெரிய Contractorனு வித்தியாசம் இருக்கிறதா? பதில் - பொதுவா ஒப்பந்ததாரர்களை ஐந்து வகையா பிரிக்கிறோம். 6 லட்சத்துக்குள்ள வேலை செய்ய தகுதியானவர் Class 5 contractor 15 லட்சம் வரை class 4 30 லட்சம் வரை class 3 75 லட்சம் வரை class 2 75 லட்சத்துக்கு மேல் வேலை செய்ய தகுதியான பெரிய contractorஅ. class 1 னு சொல்றோம். இந்த வகைப்பாடு பொருத்த வரைக்கும் நாம நெடுஞ்சாலை மற்றும் PWD guidelines எடுத்துக்கறோம். நெடுஞ்சாலைத்துறை அரசாணை எண் 251 நாள் 12.10.2007 # சிவதி#