Monday, October 31, 2016
ஊரக வளர்ச்சி / - வினா எண் 19
நானே கேள்வி நானே பதில் வினா எண் 18
நானே கேள்வி # நானே பதில் # சிவதி./ தொழில் உரிமம் - வினா எண் 18
கேள்வி – தோழர் வணக்கம். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் உரிம்ம் கோரி விண்ணப்பிக்கும் போது நாம் கோப்பினை எப்படி சரிபார்ப்பது?
சிவதி பதில் – ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பல அலுவலருக்கு இதில் பல ஐயம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஒரு நிறுவனத்திற்கு உரிம்ம் அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புள்ள நேர்வு என்பதால் இதில் நமது அலுவலர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. முதலில் கீழ்கண்டுள்ள இனங்கள் அதில உள்ளனவா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
1. அந்த நிறுவனத்தின் கட்டிடம் கட்ட நகர்புற ஊரமைப்பு துறையினரின் தொழில் நுட்ப அனுமதி (DTCP approval)
2. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று (Pollution NOC)
3. தொழிற்சாலைகளின் ஆய்வாளரிடமிருந்து தடையின்மை சான்று (Inspector of factories NOC)
4. சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் இருந்து தடையின்மை சான்று (DD Health NOC)
5. தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று
6. காவல் துறையின் தடையின்மை சான்று (நேர்வுக்கு ஏற்ப)
7. மாவட்ட தொழில் மையத்தின் சான்று
8. அந்த நிறுவனம் சிப்காட்டில் இருக்குமானால் சிப்காட் பொறுப்பு அலுவலரின் தடையின்மை சான்று / கடிதம்
9. எத்தனை குதிரைத்திரன் கொண்டுள்ள இயந்திரம் மூலம் பொருட்கள் / நிறுவனம் இயங்கவிருக்கிறது என்ற விவரம்
10. பெரு நிறுவனம் எனில் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்ட தொழில் நுட்ப அனுமதியுடன் கூடிய வரைபடம் இவை அனைத்தும் சரியாக இருக்குமாயின் ஆணையர் ஒன்றியக்குழுவிற்கு பரிந்துரை செய்து ஒன்றியக்குழு தலைவர் மூலம் மன்ற கூட்டத்தில் வைத்து அனுமதி கோருதலே சரியான நடைமுறையாகும்.
(இப்போது தனி அலுவலருக்கான நடைமுறை என்பதை கருத்தில் கோள்ளவும்)
மேற்படி சான்றிதழ்கள் நேர்வுக்கு ஏற்றார்போல் ஒன்றிய அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். நிறுவனத்த்தின் அமைவிடம் தனேயே இருக்குமாயின் அணுகு சாலையின் பராமரிப்புக்கான கட்டனத்தை அரசிதழின்படி தொழில் உரிமத்திற்காக நாம் நிர்னயிக்கும் கட்டணத்துடன் சேர்த்து கேட்பு ஆணை கோரலாம். # சிவதி. 7871336611
Tuesday, October 25, 2016
அடிப்படை விதிகள் # வினா எண் 17
நானே கேள்வி நானேபதில் # சிவதி அடிப்படை விதிகள் வினா எண். 17
கேள்வி - பணிக்காலத்தில் அரசு ஊழியர் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு உடனடியாக செய்க்கூடிய அரசு சலுகை என்ன?
பதில் - இறந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு ஈமச்சடங்கு தொகையாக ரூ.5000/- (ஐந்தாயிரம் மட்டும்) வழங்கலாம். இத்தொகையினை அரசு ஊழியர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடத்தில் வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.
இதற்கென அலுவலுகத் தலைவர் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. தன்னிடம் கையிருப்பில் உள்ள எவ்விதமான நிதியிலிருந்தும் வழங்கலாம். பின்னர் பட்டியல் அனுப்பி ஈடு செய்ய வேண்டும். (இந்த இடத்தில் அலுவலகத் தலைவர் கருணையுடனும் அதே நேரத்தில் திறமையாகவும் செயல்பட வேண்டும்)
குடும்ப நல நிதித்தொகை கணக்கில் பற்று எழுதி அவரது குடும் நல நிதித்தொகை பெறும் போது அதில் ஈடு செய்ய பட்டியல் அனுப்ப வேண்டும். அந்த தொகையினை பெற உரிமை உள்ளவர் மற்ற பட்டியலில் பிடித்தம் செய்யக் கோரினாலும் அவ்வாறு பிடித்தம் செய்து கொள்ளலாம்.
அரசு கடிதம் எண். 63811/ ஓய்வூதியம்/92-1 நிதித்துறை நாள். 15.7.1992 # சிவதி,TNRDOA, 7871336611
Monday, October 24, 2016
நானே கேள்வி நானே பதில் - 15
நானே கேள்வி # நானே பதில் - வினா எண் 14
செயலி அறிவோம் - 1
*செயலி அறிவோம் - 1 * Tamil Typing Without Key Board
பல பேருக்கு அனுப்ப விருப்பம். ஆனால் எப்படி தமிழ்விசைப்பலகை மொபைலில் நிறுவுவது. அதனை எப்படிதட்டச்சு செய்ய வேண்டும் என்ற கேள்வியும் தயக்கமும் நாம்நமது தாய் மொழியில் எண்ணங்களை பகிர முடியாமல்நம்மை முடக்கி வைக்கும்.
அப்படி தமிழில் செய்திகளை அனுப்ப வேண்டும் என்ற ஆவல்இருப்பவர்களுக்கு ஒரு எளிய வழி இருக்கிறது.
உங்களது ஆன்ராய்ட் மொபைலில் play store செல்லுங்கள். Google Handwriting input என தட்டச்சுங்கள். இப்போது இந்தசெயலியை நிறுவுங்கள். இதில் language input ல் தமிழ் எனதேர்வு செய்து முயற்சி செய்யுங்கள். 99 விழுக்காடுதுல்லியமாக வேலை செய்கிறது. உங்கள் ஆள்காட்டி விரல்கொண்டு எழுத ஆரம்பியுங்கள். கோழி கிறுக்கல்கையெழுத்தைக் கூட அழகாக எழுத்துருவாக TEXT ஆகமாற்றுகிறது. இது ஒருங்குறி எழுத்தாக மாறுவதால் நீங்கள்எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ,வாட்ஸ்ஆப் செய்தியோ தமிழில் தங்கு தடையின்றிபகிரலாம்….
அது மட்டுமல்ல இது Bilingual அதாவாது இருமொழியும் உணர்ந்து அதற்கேற்றார் போல் Text ஆக மாற்றி கொடுக்கும். அதாவாது தமிழில் எழுதினால் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதினால் ஆங்கிலத்திலும் எழுத்துரு அமையும்.
இத்தொழில் நுட்பம் வெகு வேகமாக அனைவரையும் கவருகிறது. விரைவில் தட்டச்சு முறை என்பதே ஒழிந்து விடும் அளவிற்கு தொழில் நுடப்ம் புலிப்பாய்ச்சல் அடைந்துள்ளது.
தமிழ் எல்லா தொழில் நுட்பத்திற்கும் அணியமாகி வருகிறது.தாய்மொழி வேகத்திற்கு நாம் செல்லவில்லை எனில்வரலாறு ஒரு போதும் நம்மை மன்னிக்காது # சிவதி, TNRDOA 7871336611,
https://youtu.be/D7wnsG6jIcI இந்த இணைப்பினை சொடுக்கி காணொலி மூலம் இந்த செயலியை (Apps) - எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறியாலாம்
செயலி அறிவோம் - 2
செயலி அறிவோம் - 2
ஆண்ட்ராய்டு போன் எனில் வாட்ஸ் ஆப் தாண்டிய வேறெந்த செயலியும் இருப்பதாக பல பேர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் பல பயனுள்ள செயலிகள் நம் ஆண்ட்ராய்டில் பொதிந்து கிடக்கின்றன.
அதில் முக்கியமான செயலி டெய்லி ஹன்ட் Daily Hunt.. இதில் ஒரு கல்லில் நான்கு மாங்காய்.
ஆம்.. நீங்கள் செய்தி வாசிக்கலாம்..
புத்தகம் வாசிக்கலம்,
வேலைக்கு படிக்கலாம்..
வேலை வாய்ப்பை தேடலாம்…
ஆனந்த விகடன், நக்கீரன், குங்குமம் உட்பட நடப்பு வாரம், கடந்த வாரம் என புத்தகங்களை டிஜிடல் வெர்சனாக நீங்கள் வாங்கி மொபைலிலேயே படிக்காலம். 25% மேல் தள்ளுபடியில் நிறைய நூல்கள் கிடைக்கின்றன். உங்களிடத்தில் டேப்(TAB) இருந்தால் படிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.
அதற்கான தொகை நீங்கள் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து கூட செலுத்த வேண்டிய தேவையில்லை. உங்களது சிம் கார்டில் இருக்கும் தொகையில் இருந்தே பிடித்துக் கொள்வார்கள். ஒரு ரூபாய்க்கு கூட புத்தகங்கள் கிடைக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அளிக்கும் செயலிகள் பல இருக்கின்றன. செய்திகளைவிட இதில் கூடுதலாக நாம் காண்பது இலவச புத்தகங்கள். தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் அளிக்கபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பைசா செலவில்லாமல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஆப் லைனில் இருக்கும் போதும் படிக்கலாம். தமிழ் ஆங்கிலம்,மலையாளம் என 15 மொழிகளில் இந்த செயலி இயங்குகிறது. இப்போதே தரவிரக்கம் செய்து இலவச நூல்களை பெற்று மொபைலில் படித்துப் பாருங்கள்.
புத்தகத்தில் படிக்கும் நேர்த்தி மொபைலில் படிப்பதில் இல்லை என்றாலும் காத்திருக்கும் நேரத்தில் விரும்பியதை படிக்கலாமே…
எத்தனை நாள்தான் Forward செய்யும் மொக்கை செய்திகளை நாம் படித்துக்கொண்டு இருப்பது.
https://play.google.com/store/apps/details?id=com.eterno இதில் சொடுக்கி உங்கள் திறன்பேசியில் செயலியை நிறுவி தொடருங்கள் உங்கள் வாசிப்பை.
புதியன விரும்பு என்ற பாரதியின் வாக்கினை பின்தொடர்வோம் # சிவதி, TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் - வினா எண் 2
கேள்வி - உள்ளாட்சியில் பகிரங்க ஏலம் விடும்போது ஏல நோட்டீசில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?
சிவதி பதில் - பொதுவாக ஊராட்சிகளில் ஏலம் விடுவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை.
ஆனால் உரிய நடைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. முடிந்த வரையில் இதனை மூன்று கேள்வி பதில்களில் நிறைவு செய்கிறேன். மொதல்ல பத்து point note பன்னுங்கப்பா….
1. முதலில் ஏலம் விடும் உத்தேசித்த பத்து தினங்களுக்குள் நோட்டீஸ் அனுப்பனும். அதுக்காக 20 நாட்கள் முன்னதாகவே அறிவிப்பு செய்யக்கூடாது.
2. அது கிராம ஊராட்சியோ அல்லது வட்டார ஊராட்சியோ தொடர்பான ஊராட்சியின் மன்ற ஒப்புதல் பெறனும்… சரியா…
3. ஏலம் நடக்கும் இடம், நேரம், தேதி ஆகியவையும் அது யாரால் நடத்தப்பெறும் என்ற விவரமும் நோட்டீசில் இருக்கனுமுங்க…
4. நோட்டீசில் எந்த கால கெடுவிற்குள் இந்த ஏல ஒப்பந்தம் நடைபெறும் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.
5. பாதுகாப்பு வைப்புத் தொகை எவ்வளவு என்பது அந்த நோட்டீசில் இருக்கனும்ங்க…
6. ஒருத்தர் ஏலம் எடுக்கிறார்னு வச்சுக்குவோம்… அவர் எவ்வளவு தொகை செலுத்தனும் அத எப்புடி செலுத்தனும்னு தெளிவா நோட்டீசுல தெரிவிக்கனும்.
7. ஏலத்தில் கலந்து கொள்வோர் கடந்த முறை நடந்த ஏலத்தில் அவர்களின் செயல்முறைகளை பரிசீலித்து அவர் பெயர் black listல் இருக்கிறாரா என்பதையும் பணம் ஏதும் நிலுவை வைத்துள்ளாரா என்பதை கண்காணித்து அவரை ஏலத்தில் பங்கு கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.
8. ஏலத்தின் நேர்வுக்கு ஏற்றார் போல சொத்து சான்று கோரலாம்.
9. ஏலம் எடுத்தவுடன் விண்ணப்பதாரர் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை ஏல நோட்டீசில் தெளிவா குறிப்பிடனும்.
10. ஏலத்திற்கான பட்டியல் தொகை (schedule) தொகை எவ்வளவுன்னு தெரிவிக்கனும். ஏலம் எடுத்தவர் தொகையை எத்தனை தவனையா செலுத்தலாம்.. இல்ல ஒரே தவனையா செலுத்தலாமான்னு தெரிவிக்கனும். Scheduleக்கு vat உண்டு…. மறந்துடாதீங்கண்ணே அப்புறம் வருத்தப்படூவீக…..
மேலும் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றியும் இந்த ஏலம் ரத்து செய்ய ஏலம் நடத்தும் செயல் அலுவலருக்கு உரிமை உண்டுன்னு ஒரு அறிவிப்பு அதுல இடம் பெறனும்.
இன்னும் பல விவரம் இருக்கு அடுத்த கேள்வியில அது வரும்…. – சிவதி. TNRDOA 7871336611
மனைப்பிரிவு - வினா எண் -5
கே- ஒரு லேஅவுட்டில் காலி இடம் விடவேண்டுமா?
பதில் - ஆம். தமிழ்நாடு கட்டிட விதிகளின் படி ஒரு மனைப்பிரிவில் ( லே அவுட்டில்) 10க்கும் மேற்பட்ட மனைகள் இருக்கவேண்டும்.
அதில் பூங்கா , விளையாட்டு மைதானம் (அ) பொழுதுபோக்கு தளம் ஆகிய பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் பகுதிகள் மொத்த லேஅவுட் விஸ்தீரணத்தில் 10%க்கு குறையாமல் அமைந்து இருக்க வேண்டும் - சிவ. தினகரன் TNRDOA, 7871336611
நானே கேள்வி # நானே பதில் # வினா எண் 6
கேள்வி - ஊராட்சிகளில் எப்படி ஏலம் நோட்டீஸ் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்?
சிவதி பதில் – முதலில் ஊராட்சி என்பது பொதுப்பெயர் என்பதை அறிக.
அது வட்டாரமாகட்டும் கிராமம் ஆகட்டும் இல்லைன்னா மாவட்டம் ஆகட்டும் சட்டப்படி எல்லாம் ஊராட்சிதான்.
1. ஊராட்சியில் ஏல அறிவிப்பு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்
2. ஒரு வேலை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலம் எனில் அது எந்த ஊராட்சி ஊராட்சி பகுதியை சார்ந்ததோ அந்த கிராம ஊராட்சியிலும் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
3. மக்கள் கூடும் இடம் சந்தை, வழிபாட்டு தளம், சாவடி என விளம்பரம் செய்யலாம்.
4. மூன்று மணி நேரம் முன்னதாக தண்டோரா போடவேண்டும் என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்டோரா போடும் மூறை வழங்கொழிந்து விட்டதால் ஆட்டோவில் மைக் மூலம் அறிவிக்கலாம்.
5. ஏலம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் அது தொடர்பான கோப்பில் கரும சிரத்தையுடன் தொகுக்க வேண்டும்.
6. ஏலம் விடக்கூடிய பொருள் தொடர்பான முகவர்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளம்பர அறிக்கை சேர்த்தல் வேண்டும்.
7. ஏலத்தொகை ரொக்கமாகவா அல்லது வங்கிவரைவா அல்லது பிற வகையிலா என்பது தெளிவாக நோட்டீசில் குறிப்பிட வேண்டும்
8. ஏலம் நடைபெறவிருக்கும் நாளில் இருந்து 7 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் விளம்பரம் அரசிதழில் பிரசுரிக்க வேண்டும்.
9. ஏலத்தின் மொத்த தொகை 10 ஆயிரத்திற்குள் எனில் மாவட்ட அரசிதழிலும்
10க்கு மேல் எனில் நாளிதழிலும் விளம்பரம் செய்ய வேண்டும்.
10. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எல்லோராலும் இந்த விவரங்கள் கேட்க முடியும் என்பதால் நிச்சயமாக ஒளிவு மறைவற்ற தன்மை ஏல விளம்பர அறிவிப்பில் தேவை…..
அடுத்த கேள்வி பதிலில் ஏலம் தொடர்பான இதர முக்கிய விவரங்கள் முடித்துக்கொள்கிறேன். – சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம் 7871336611
நானே கேள்வி 3 நானே பதில் # சிவதி - வினா எண் 8
கேள்வி - அய்யா வணக்கம் நான் ஊராட்சி உதவியாளராக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது இ.நி.உ. ஆக பணிபுரிந்து வருகிறேன். நான் ஊராட்சி ஊராட்சி செயலராக இருந்த போதே துறைத் தேர்வுகளில் மூன்று பாடங்கள் தேர்வடைந்துவிட்டேன். என்னுடைய பதவி உயர்வுக்கு நானிப்போது இதர தேர்வு மட்டும் எழுதினால் போதும்தானே?
பதில் - ஆமாம். ஒருவர் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு முன்பாக தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை உள்ளது.
எனவே நீங்கள் ஊராட்சி செயலர் பதவியில் தேர்ச்சி அடைந்த பாடங்களை உரிய அடையாளச்சீட்டுடன் பணிப்பதிவேட்டில் அலுவலகத் தலைவரிடம் சான்று பெறுங்கள். நிகர உள்ள பாடங்களை தகுதிகாண் பருவத்திற்குள் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே தேர்ச்சி அடைந்த பாடத்தினை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆதாரம் Rule 15, Tamilnadu State and Subordinate Service Rules) # சிவதி TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் வினா எண் - 4
கேள்வி - நான் ஒரு லே அவுட் விளம்பரத்தை நாளிதழில் பார்த்தேன். அதில் ஊராட்சியால் அங்கிகரிக்கப்பட்ட மனைப்பிரிவு என இருந்தது. லே அவுட் காபியில் village pt. தீர்மான எண்ணுடன் கிராம ஊராட்சி தலைவரின் கையெப்பமும் இருந்தது. நான் அம்மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கலாமா?
பதில் - அம்மனையினை தயவு செய்து வாங்க வேண்டாம். DRD, D.O. lrன் படி (ந.க. எண். 83921/03/PH2, Dt. 14.11.2003) நகர் ஊரமைப்பு இயக்குனரின் தொழில்நுட்ப அனுமதி இன்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு எவ்விதமான மனைப்பிரிவு அனுமதியும் வழங்க அதிகாரமில்லை.
பஞ்சாயித்து அனுமதி பெற்ற லே அவுட் என்ற விளம்ரங்கள் மக்களை ஏமாற்றும் அப்பட்டமான மோசடி. - சிவ.தினகரன், TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் # வினா எண் 9
கேள்வி - தகுதிகாண் பருவம் என்பது அந்த குறிப்பிட்ட நாட்களில் விடுப்பின்றி அலுவலகம் வருவது அப்படித்தானே….
பதில் - இல்லை. அவ்வாறு கருத முடியாது. உங்களது தகுதி காண் பருவத்தில் குற்றச்சாட்டுகள் காரணமாக உங்கள் பணி நிறைவாக இல்லை என உங்கள் அதிகாரி கருதினால் நீங்கள் திறமையற்றவர் என கருதுவாரானால் உங்களது தகுதிகாண் பருவத்தை நீட்டிக்க அவருக்கு உரிமை உண்டு. அது மட்டுமல்ல உங்களை பணியிலிருந்தே விடுவிக்கவும் கூட அவர் நடவடிக்கை எடுக்கலாம். அதற்கான அதிகாரம் மேல் அலுவலருக்கு வழங்கப் பட்டுள்ளது
ஆதாரம் Rule 27 (C) of Tamil Nadu State and Subordinate Service Rules # சிவதி, TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் - சிவதி - வினா எண் 10
#. நானே கேள்வி # நானே பதில் # சிவதி. காஞ்சிபுரம் மாவட்டம். / ஊரக வளர்ச்சி / -. வினா எண் 10
கேள்வி – பகிரங்க ஏலம் நட்டத்தப்பெற என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் ?
சிவதி பதில் –
1. கூடுமான வரையில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்ற அலுவலக வளாகத்திற்குள்தான் ஏலம் நடத்த வேண்டும்
2. ஏலம் விடக்கூடிய பொருள் எளிதில் இடம்பெயர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே அவ்விடத்திற்கு அருகாமையில் ஏலம் விடும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம்
3. ஏல நடைமுறை ஒளிவு மறைவு இல்லாத பகிரங்க ஏலமாக அமையவேண்டும்
4. ஏலம் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த மன்ற குழுவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினருக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்
5. ஏலம் விடும் அலுவலர் ஏலம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே அவ்விடத்தில் இருக்க வேண்டும்
6. பலவிதமான பொருட்கள் ஏலம் விடுவதாக இருந்தால் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்
7. முதலில் ஏலம் விடும் தொகையின் சந்தை மதிப்பின் அடிப்படையில் தொகையினை நிர்ணயித்து பின்னர் ஏலம் விடும்போது அத்தொகையில் இருந்து படிப்படியாக உயர்த்திக்கொண்டே போகும் நடைமுறையின்படி ஏலம் விடப்பட வேண்டும்
8. வைப்புத்தொகை மற்றும் ஏலத்தொகை பெற்றுக்கொண்டே அடுத்த பொருள் ஏலம் விடவேண்டும். வைப்புத்தொகை செலுத்தாத ஏலம்/குத்தகைதாரரை ஏலத்திற்கு அனுமதிக்கூடாது
9. ஏல நடைமுறை நாளிலேயே ஏலம் கிடைக்காத நபருக்கு உரிய வைப்புத்தொகையினை திரும்பத்தருதல் வேண்டும். எந்த பண வர்த்தணைக்கும் அச்சிட்ட ரசீது வழங்கப்பட வேண்டும்
10. ஏலத்திற்கென வசூல் செய்த தொகையினை ஏல தினத்தன்றோ அல்லது அன்றைய மறு வேலைநாளிலோ உடனடியாக கருவூலத்தில் செலுத்திடல் வேண்டும்.
மேற்படி நடைமுறைகள் ஏலம் மற்றும் குத்தகைகளுக்கு பொருந்தும். மேலும் விவங்களை பெற நினைப்பவர்கள் அரசு ஆணை எண் (G.O. (Ms) No. 277, Rural Development (C-4) Department, Dated 22nd November, 2001) ல் அறியலாம் (3வது பகுதி முற்றும்) – சிவதி. TNRDOA, 7871336611.
நானே கேள்வி நானே பதில் - வினா எண் -7
கேள்வி - நைனா...நைனா… Undisbursed Pay Register அப்படின்னா என்னா நைனா..
பதில் - நல்ல வேளை. இப்போவாவது கேட்டியே. கருவூலத்தில இருந்து நீ எந்த பட்டியல் தொகை வாங்கி வந்தாலும் அந்த தொகைய உரியவர் கிட்ட கொடுத்து ஒப்புதல் வாங்கனும். கூடுமான வரைக்கும் அன்றய நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கனும்.
ஒரு வேளை உன்னால கொடுக்க முடியாத மாதிரி சந்தர்பம் வந்ததுன்னா அதை Undisbursed Pay Registerல எழுதி பதியனும். இதுக்கும் ஒரு கால கெடு உண்டு அத மூனு மாசம் வரைக்கும் வச்சிருக்காலம். அதுக்கும் மேல அந்த தொகைய கொடுக்க முடியலைன்னா அத கருவூலத்துல அதாம் டிரெஷெரியில கட்டிறனும். புரிஞ்சுதா.
இப்போ பெரும்பாலும் ECS இருக்கு அதனால இது போன்ற நிகழ்வு வர்ரதில்லை. ஆனால சில பட்டியலுக்கு இது மாதிரி நேர்வு வரும் . அப்போ இதை மிகச்சரியாக கடைபிடிக்கனும். S.R. 26 T.R.10, TAMILNADU TREASURY CODE VOL 1) # சிவதி, TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் - 12
கேள்வி - இதுக்கு முன்னாடி வாய்க்கால் வரப்பா இருந்த இடம். இப்போ plots போட்டிருக்காங்க. மெயின் ரோடுக்கு பக்கமாவே இருக்கு. அதுல நான் ஒரு பிளாட் வாங்கலாமா?
பதில் - ஆவணங்களை சரிபார்த்து வாங்குங்கள்.
உள்ளூர் திட்டக் குழுமத்தின் limit-ல்
உள்ள இடங்கள் பல zone-களாக பிரிக்கப்பட்டிருக்கும்.
1. Residential Zone - குடியிருப்பு பகுதி
2. Commercial Zone - வர்த்தகம் அல்லது வணிகப் பகுதி
3. Industrial Zone - தொழிற்சாலை பகுதி
4. Educational use Zone - கல்வி நிறுவனங்கள் பகுதி
5. Public and Semi Public use Zone
6. Agricultural Zone - விவசாய பகுதி
இதில் Residential Zone-ல் வரும் இடத்தை மட்டும் தான் வீட்டு மனைகளாகப்
பிரித்து அங்கீகாரம் பெற முடியும். மற்ற Zone-ல் உள்ள இடத்தினை வீட்டு
மனைகளாக பிரிக்க வேண்டும் என்றால், அரசாங்கத்துக்கு மனு செய்து முதலில்
Zone மாற்றம் (Conversion) செய்ய வேண்டும்.
அப்படி மாத்தினா மட்டுந்தான் விவசாய நிலை குடியிருப்பு பகுதியா மாறும்னு நினைவுல வச்சுக்குங்க # சிவதி#7871336611
நானே கேள்வி நானே பதில் - வினா எண் 13
கேள்வி – வங்கி காசோலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கையெப்பம் இருந்து, கணக்கில் பணம் இருந்தால் வங்கி சட்டப்படி தொகை விடுவிக்க வேண்டும் அப்படித்தானே?
பதில் – வங்கி சட்டப்படி அப்படித்தான். ஆனால் ஊராட்சிகளில் கணக்கு எண் 1ல் இது பொருந்தினாலும் ஊராட்சி கணக்கு எண். 2ல் இது செல்லுபடியாகாது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தன்னிச்சையாக EBக்கு பணம் செலுத்தாமல் பெரும் தொகை கையாடல் செய்யும் மோசடிகள் கண்டறியப்பட்டன.
இதன் விளைவாக தமிழக அரசு 17.8.2007ல் அரசாணை (நிலை) எண். 146ல் காசோலைகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செயல்முறைகள் வாயிலாக விடுவிப்பு ஆணைகள் இணைத்தால் மட்டுமே தொகை கொடுக்கப்பட வேண்டும்' என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் withdrawal slip மூலம் தொகை எடுக்க்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள் காசோலைகளில் இந்த முத்திரை உள்ளதா என கண்காணிக்க வேண்டும் # சிவ. தினகரன
நானே கேள்வி # நானே பதில் - அடிப்படை விதிகள் -2 # வினா எண் 3
கேள்வி - தகுதிகாண் பருவத்தில் விடுப்பு எடுக்கலாமா?
சிவதி பதில் - தற்செயல் விடுப்பு எடுத்தால் பிழையொன்றும் இல்லை. . தாராளமாக எடுக்கலாம் அது தவிர்த்த பிற விடுப்புகள் அனைத்தும் தகுதிகாண் பருவத்தில் எடுத்தால் உங்கள் தகுதிகாண் பருவம் தள்ளிப் போகும். அது மட்டுமல்ல அவ்விடுப்புகள் அரசு விடுமை நாளுடன் சேர்த்து எடுத்தால் அதுவும் கணக்கீடு செய்யப்பட்டு தகுதிகாண் பருவம் தள்ளிப்போகும் என்பதை உணர வேண்டும். இது உங்களோட அடிப்படை விதியிலேயே இருக்குங்க.. படிச்சுப்பாருங்க. தெரியும் # சிவதி TNRDOA, 7871336611
நானே கேள்வி நானே பதில் - 1
கேள்வி - ஒரு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது தீடீரென இறந்துவிட்டார். அவரது குடும்ப ஓய்வூதியம் பற்றி…
சிவதி பதில் - குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பணிக்காலத்தில் இறந்துவிட்டால் முதலில் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விலக்கக் கொள்ளப்பட்டதாக கருத வேண்டும். எனவே அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கலாம்.
ஆதாரம் அரசாணை எண். 2999, Public (Ser-B) Det dt. 4.12.1969 # சிவதி TNRDOA, 7871336611