நானே கேள்வி # நானே பதில் # சிவதி./ தொழில் உரிமம் - வினா எண் 18
கேள்வி – தோழர் வணக்கம். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் உரிம்ம் கோரி விண்ணப்பிக்கும் போது நாம் கோப்பினை எப்படி சரிபார்ப்பது?
சிவதி பதில் – ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பல அலுவலருக்கு இதில் பல ஐயம் வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஒரு நிறுவனத்திற்கு உரிம்ம் அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புள்ள நேர்வு என்பதால் இதில் நமது அலுவலர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. முதலில் கீழ்கண்டுள்ள இனங்கள் அதில உள்ளனவா என்பதை ஆய்வு செய்யுங்கள்.
1. அந்த நிறுவனத்தின் கட்டிடம் கட்ட நகர்புற ஊரமைப்பு துறையினரின் தொழில் நுட்ப அனுமதி (DTCP approval)
2. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று (Pollution NOC)
3. தொழிற்சாலைகளின் ஆய்வாளரிடமிருந்து தடையின்மை சான்று (Inspector of factories NOC)
4. சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் இருந்து தடையின்மை சான்று (DD Health NOC)
5. தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று
6. காவல் துறையின் தடையின்மை சான்று (நேர்வுக்கு ஏற்ப)
7. மாவட்ட தொழில் மையத்தின் சான்று
8. அந்த நிறுவனம் சிப்காட்டில் இருக்குமானால் சிப்காட் பொறுப்பு அலுவலரின் தடையின்மை சான்று / கடிதம்
9. எத்தனை குதிரைத்திரன் கொண்டுள்ள இயந்திரம் மூலம் பொருட்கள் / நிறுவனம் இயங்கவிருக்கிறது என்ற விவரம்
10. பெரு நிறுவனம் எனில் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்ட தொழில் நுட்ப அனுமதியுடன் கூடிய வரைபடம் இவை அனைத்தும் சரியாக இருக்குமாயின் ஆணையர் ஒன்றியக்குழுவிற்கு பரிந்துரை செய்து ஒன்றியக்குழு தலைவர் மூலம் மன்ற கூட்டத்தில் வைத்து அனுமதி கோருதலே சரியான நடைமுறையாகும்.
(இப்போது தனி அலுவலருக்கான நடைமுறை என்பதை கருத்தில் கோள்ளவும்)
மேற்படி சான்றிதழ்கள் நேர்வுக்கு ஏற்றார்போல் ஒன்றிய அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். நிறுவனத்த்தின் அமைவிடம் தனேயே இருக்குமாயின் அணுகு சாலையின் பராமரிப்புக்கான கட்டனத்தை அரசிதழின்படி தொழில் உரிமத்திற்காக நாம் நிர்னயிக்கும் கட்டணத்துடன் சேர்த்து கேட்பு ஆணை கோரலாம். # சிவதி. 7871336611